YouTurn

விவசாயிகள் போராட்டத்தை தடுக்க இராணுவம் களமிறங்கியதாக வைரலாகும் வீடியோ| உண்மை என்ன ?

விவசாயிகள் போராட்டத்தை தடுக்க இராணுவம் களமிறங்கியதாக வைரலாகும் வீடியோ| உண்மை என்ன ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இந்திய இராணுவம் விவசாயிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டால், இந்த நாட்டின் உண்மையான எஜமானர்கள் யார் என்பதில் எங்களுக்கு அனைத்து சந்தேகங்களும் நீங்கிவிடும்.



Facebook link | Archive link

விரிவான விளக்கம்

தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டிருக்கும் இந்திய இராணுவத்திற்கு சொந்தமான வாகனங்களைப் பின்தொடர்ந்து ஒருவர் காரில் வீடியோ எடுத்துக் கொண்டே செல்லும் வீடியோவில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை முறியடிக்க இந்திய ராணுவம் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறுகிறார்.



Archive link 





இந்த 1.13 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரலாகி வருகிறது. இந்திய ராணுவத்தை விவசாயிகளுக்கு எதிராகப் பயன்படுத்தினால் இந்த நாட்டின் உண்மையான எஜமானர்கள் யார் என்கிற சந்தேகம் நீங்கி விடும் என பிரதமர் மோடி, அம்பானி, அதானியை விமர்சித்து தன் முகநூல் பக்கத்தில் பியூஸ் மனுஷ் 40 நொடிகள் கொண்ட வீடியோவை பதிவிட்டு உள்ளார். இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

விவசாயிகள் போராட்டத்தை தடுக்க இந்திய இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக வைரலாகும் கூற்று தவறான எனப் பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் மறுக்கப்பட்டு உள்ளது. PIB-யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், " வைரலாகும் கூற்றை மறுத்து, இந்த வீடியோ ராணுவத்தின் வழக்கமான நடவடிக்கையாகும் என்றும், இதற்கும் விவசாயிகள் போராட்டத்திற்கும் தொடர்பில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



Archive link 

வைரல் செய்யப்படும் வீடியோவில் செல்லும் வாகனத்தை இயக்குபர்களை தவிர ராணுவ வீரர்கள் இருப்பது தென்படவில்லை என்பதை தெளிவாய் காணலாம். லாரிகள், கார்கோஸ் மற்றும் கனரக பீரங்கிகள் மட்டுமே செல்வதை வீடியோவில் காண முடிகிறது.



பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பாரத் பூஷன் பாபு, " டெல்லியைச் சுற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு எதிராக இராணுவத்தை களமிறக்கியதாக வைரலாகி வரும் வீடியோ போலியானது. அந்த வீடியோவில் காணப்பட்ட இராணுவப் படை உண்மையில் பீரங்கிகளை கொண்டு சென்ற ஒரு பொதுவான போக்குவரத்து மற்றும் கான்வாயில் பீரங்கிகள் மட்டுமே இருந்தன, இராணுவ வீரார்கள் உடன் டிரக் செல்லவில்லை " என ஃபேக்ட் கிரெசென்டோ எனும் ஆங்கில உண்மை கண்டறிதல் இணையதளத்திற்கு பதில் அளித்ததாக வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் இராணுவ வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் டெல்லி விவசாயிகள் போராட்டத்தை தடுக்க கொண்டு செல்லப்படுவதாக வைரலாகும் தகவலை பாதுகாப்பது அமைச்சகம் தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது. வைரலாகும் வீடியோவில், பீரங்கிகள் மற்றும் டிரக்குகள் மட்டுமே பயணிக்கின்றன இராணுவ வீரர்கள் தென்படவில்லை என காண முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க