YouTurn

இராணுவ தேர்வு கேள்வித்தாளை திருடி விற்ற 18 ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் கைதா ?

இராணுவ தேர்வு கேள்வித்தாளை திருடி விற்ற 18 ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் கைதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இராணுவத் தேர்விலும் ஊழல் ! திருடிய கேள்விதாளை 10 கோடிக்கு விற்ற 18 ஆர்எஸ்எஸ் திருடர்கள் !

விரிவான விளக்கம்

பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் இந்திய இராணுவ தேர்விலும் ஊழல் நடந்து இருப்பதாகவும், இராணுவ தேர்வின் கேள்வித்தாளை திருடி 10 கோடிக்கு விற்ற 18 ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாக இந்த மீம் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

அதில், " இந்திய இராணுவத் தேர்வுக்கான கேள்வித்தாளை திருடி 10 கோடிக்கு விற்றதாக மாராட்டியம் மாநிலம் மற்றும் கோவாவை சேர்ந்த 18 RSS உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தானே மாநகர காவல்துறையின் தலைவர் நித்தீன் தாக்கரே இதைத் தெரிவித்தார். மேலும் தேர்வு எழுதிய 350 நபர்களும் பிடிபட்டுள்ளனர். கேள்வித்தாள்களை தலா 2 லட்சத்திற்கு விற்றதாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர் " என இடம்பெற்றுள்ளது.

உண்மை என்ன ?



இராணுவத் தேர்வு கேள்வித்தாளை திருடி விற்றதாக கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து தேடுகையில், 2017-ம் ஆண்டில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து எகனாமிக் டைம்ஸ்,தி ஹிந்து பிசினஸ்லைன் உள்ளிட்ட ஆங்கில செய்திகள் மற்றும் தினத்தந்தி, மாலைமலர் போன்ற தமிழ் செய்திகள் என பலவற்றில் வெளியாகி இருக்கிறது. ஆனால், கைது செய்யப்பட்டவர்கள் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் என எங்கும் குறிப்பிடப்படவில்லை.



" மராட்டியம், கோவா மாநிலங்களில் ராணுவ தேர்வுக்கான கேள்வித்தாள்கள் முன்கூட்டியே வெளியானது. இதுதொடர்பாக, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி, துணை ராணுவ அதிகாரி மற்றும் 3 இடைத்தரகர்கள் உள்பட 18 பேரை தானே குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், வினாத்தாள்களை வைத்திருந்ததாக 350 மாணவர்களை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர் " என செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், வைரலாகும் பதிவில் கூறியது போன்று நித்தீன் தாக்கரே தானே மாநகர காவல்துறையின் தலைவர் அல்ல, குற்றப்பிரிவின் மூத்த காவல் அதிகாரி ஆவார்.

ஒருவேளை கைது செய்யப்பட்டவர்களில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் இருந்திருந்தால் இந்திய அளவில் தலைப்பு செய்தியாக மாறியதோடு, அரசியல் வட்டாரங்களில் எதிர்ப்புகள் பெரிதாய் கிளம்பி இருக்கும்.

முடிவு :

நம் தேடலில், 2017-ல் இராணுவ தேர்வின் கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் 18 ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானது. உண்மையாக நிகழ்ந்த சம்பவத்துடன் ஆர்எஸ்எஸ் பெயரை இணைத்து வேண்டுமென்றே யாரோ பரப்பிய தவறான செய்தி என அறியமுடிகிறது .

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க