YouTurn

வேல் யாத்திரைக்கு அனுமதி தராவிட்டால் தீ குளிப்பேன் என அர்ஜுன் சம்பத் கூறியதாக வதந்தி!

வேல் யாத்திரைக்கு அனுமதி தராவிட்டால் தீ குளிப்பேன் என அர்ஜுன் சம்பத் கூறியதாக வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

வேல் யாத்திரைக்கு அனுமதி தராவிட்டால் தீ குளிப்பேன் - அர்ஜுன் சம்பத்



Twitter archive link  

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் நவம்பர் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த யாத்திரையை தடை செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் யாத்திரைக்கு அனுமதி இல்லை என அரசு தரப்பில் பதில் அளித்தனர்.

இதையடுத்து, வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் தீ குளிப்பேன் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாக சமூக வலைதளங்களில் ஓர் தகவல் பரவத் துவங்கியது. அதைக் கிண்டல் செய்து பலரும் பதிவிட்டு வருவதை பார்க்க முடிந்தது.







ஆனால், அர்ஜுன் சம்பத் வேல் யாத்திரைக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை என்றால் தீ குளிப்பேன் என எங்கும் கூறவில்லை. அவர் கூறாத கருத்தை கூறியதாக கிண்டல் செய்து வதந்தியை பரப்பி வருகிறார்கள்.



Tweet archive link 

இந்து மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், " இது பொய்யான தகவல். வேல் யாத்திரை பிஜேபி மேற்கொள்வது, இந்து மக்கள் கட்சி அல்ல " எனக் கூறியுள்ளார்கள்.

நவம்பர் 6-ம் தேதி (இன்று) வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன் தலைமையில் திருத்தணி சென்றுள்ளனர். தடையை மீறி சென்றதால் காவல்துறை அவர்களை கைது செய்துள்ளனர்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க