யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்தியாவில் பெரும்பாலும் LPG எரிவாயு மூலமாக செயல்படும் மயானங்களும் உள்ளன. மின்சாரத்தின் மூலமாக எரியூட்டும் மயானங்களும் இருக்கின்றன.
பரவிய செய்தி
மக்களை எவ்வளவு முட்டாள்னு நினைத்து இருந்தால் திமுகவின் ஒரு சேட்டிலைட் சேனலே, இது போன்ற தவறான வதந்திகளை பரப்பும்? அதுக்குத்தான் தற்குறியா இருக்காதீங்கடா படிங்கடா படிங்கடான்னு தலபாட அடிச்சிக்கிறோம்..
மின் மயானத்திற்கு கேஸ் தேவையா? மின் மயானத்திற்கு மின்சாரம் மட்டுமே தேவை அதற்கு கேஸ் தேவையில்லை
Electric heaters தான் வெப்பத்தை உருவாக்கும். மேலும் இது போன்ற வதந்தி பரப்பும் சேனல்களுக்கு மீது ஊடகத் தணிக்கை துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விரிவான விளக்கம்
“கோவையில் கியாஸ் தட்டுப்பாட்டால் மாநகராட்சியின் 11 மின் மயானங்களில் சடலங்களை எரியூட்டுவதில் சிரமம். கையிருப்பில் உள்ள சிலிண்டர்களை வைத்து 3 நாட்கள் வரை மட்டுமே சமாளிக்க முடியும் எனவும், நிலைமை சீராகாவிட்டால் விறகு மூலம் சடலங்களை எரியூட்ட திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல்” எனக் குறிப்பிட்டு சமீபத்தில் சன் நியூஸ் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் சன்நியூஸ் வெளியிட்ட இந்த செய்தியை விமர்சித்து சிலர், “மின் மயானத்திற்கு மின்சாரம் மட்டுமே தேவை. அதற்கு கேஸ் தேவையில்லை. Electric heaters தான் வெப்பத்தை உருவாக்கும். சன் நியூஸ் தவறாக செய்தி வெளியிட்டுள்ளது” என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மக்களை எவ்வளவு முட்டாள்னு நினைத்து இருந்தால் திமுகவின் ஒரு சேட்டிலைட் சேனலே, இது போன்ற தவறான வதந்திகளை பரப்பும்? அதுக்குத்தான் தற்குறியா இருக்காதீங்கடா படிங்கடா படிங்கடான்னு தலபாட அடிச்சிக்கிறோம்..
இப்பவாவது கொஞ்சம் நேரம் ஒதுக்கி படிங்க..
முதலில் மின்மயானம் எப்படி செயல்படுகிறது… pic.twitter.com/gy3KCcvcDt
உண்மை என்ன?
பரவி வரும் செய்தி குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், மின்சாரத்தின் மூலமாக எரியூட்டும் மயானங்களும் இருக்கின்றன. அதேசமயம் LPG எரிவாயு மூலமாக செயல்படும் மயானங்களும் உள்ளன என்பதை அறிய முடிந்தது.
இது குறித்து மேலும் ஆய்வு செய்ததில், கோவையில் உள்ள வீர கேரளம் பகுதியில் இயங்கும் மயானம் LPG எரிவாயு மூலமாகவே செயல்படுகிறது என்பதை உறுதிபடுத்தினோம்.
இதே போன்று ராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலும் இவ்வாறு கேஸ் மூலமாக செயல்படும் மயானங்கள் இருக்கின்றன.
மேலும் சென்னையில் LPG எரிவாயு மூலமாக செயல்படும் மூன்று புதிய மயானங்கள் திறக்கப்படுவது குறித்து “The Hindu” ஊடகம் கடந்த 2023 ஆம் ஆண்டில் செய்தி வெளியிட்டுள்ளது. LPG எரிவாயு மூலமாக செயல்படும் மயானங்கள் குறித்த மற்ற செய்திகளை மேலும் சில ஊடகப் பக்கங்களிலும் காண முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், LPG எரிவாயு மூலமாக மயானங்கள் செயல்படுவதில்லை எனப் பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்பது உறுதியாகிறது. மின்சாரத்தின் மூலமாக எரியூட்டும் மயானங்களும் இருக்கின்றன. அதேசமயம் LPG எரிவாயு மூலமாக செயல்படும் மயானங்களும் உள்ளன.