YouTurn

சிதிலமடைந்த அரவூர் கார்கோடகேஸ்வரர் கோவில் எனப் பரப்பப்படும் பழைய புகைப்படம் !

சிதிலமடைந்த அரவூர் கார்கோடகேஸ்வரர் கோவில் எனப் பரப்பப்படும் பழைய புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இவர் பெயர் சந்தானம் குருக்கள். அருள்மிகு கார்கோடகேஸ்வரர் சமேத மங்களாம்பிகா கோவில் அரவூர் நீடாமங்கலம் திருவாரூர் மாவட்டம் ‌யாராவது வரமாட்டார்களா இந்த கோவிலை காப்பாற்ற மாட்டார்களா! என்று கத்துக்கொண்டு நிற்கும் அந்த கோவில் குருக்களை பாருங்கள்.

X link | Archive link

விரிவான விளக்கம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே அரவூர் என்னும் கிராமத்தில் கார்கோடகேஸ்வரர் என்னும் கோவில் உள்ளது. அக்கோவில் மிகவும் சிதிலமடைந்து இருப்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. 




Facebook link


உண்மை என்ன?

பரவக் கூடிய புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், இதே தகவல் 2021ம் ஆண்டும் சமூக வலைத்தளங்களில் உள்ளது. அதில், இது தனியார் கோயில் எனக் குறிப்பிட்டு உள்ளனர். 



அக்கோவில் பெயரைக் கொண்டு தேடியதில் தினத்தந்தியில் வெளியான செய்தி ஒன்றைக் காண முடிந்தது. 2023, ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டிருந்த அச்செய்தியில் அரவூர் கிராம மக்களின் முன்னெடுப்பில் கார்கோடகேஸ்வரர் கோவில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 



மேற்கொண்டு அக்கோவில் பூஜை செய்யும் சிவாச்சாரியார் சந்தானம் அவர்களை யூடர்னில் இருந்து தொடர்பு கொண்டு பேசினோம். மங்களாம்பிகை  கார்கோடகேஸ்வரர் பெயரில் டிரஸ்ட் தொடங்கி நிதி வசூலித்து திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. முக்கால்வாசி பணிகள் முடிந்துவிட்டது. இன்னும் மதில் சுவர் மற்றும் பெயிண்ட் அடிக்க வேண்டிய பணிகள் உள்ளன. இப்பணிகளை எல்லாம் முடித்துவிட்டு கும்பாபிஷேகத்துக்கான தேதி முடிவு செய்யத் திட்டமிட்டுள்ளோம்” எனக் கூறினார். 

இவற்றில் இருந்து பரவக் கூடிய படம் பழையது என்பதும் கோவில் சீரமைக்கப்பட்டு வருவதையும் உறுதி செய்ய முடிகிறது. தற்போது எடுக்கப்பட்ட படங்களைச் சந்தானத்திடம் கேட்டுள்ளோம். கிடைக்கப்பெற்றதும் இக்கட்டுரையில் பதிவிடுகிறோம்.

முடிவு : 

திருவாரூர் மாவட்டம் அரவூர் கார்கோடகேஸ்வரர் கோவில் சிதிலமடைந்து இருப்பதாகப் பரவும் படம் சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தது. அக்கோவில் கட்டுமான பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகக் கோவில் பூசாரியே தெரிவித்துள்ளார்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க