YouTurn

ஆந்திராவில் வெள்ளத்தில் சிக்கியவர்களை ஜெசிபி எந்திரம் கொண்டு காப்பாற்றும் வீடியோ எனப் பரவும் சவுதி அரேபிய வீடியோ!

ஆந்திராவில் வெள்ளத்தில் சிக்கியவர்களை  ஜெசிபி எந்திரம் கொண்டு காப்பாற்றும் வீடியோ எனப் பரவும் சவுதி அரேபிய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஆந்திராவில் வெள்ளத்தில் சிக்கியவர்களை ஜெசிபி எந்திரம் கொண்டு காப்பாற்றும் வீடியோ எனப் பரவும் சவுதி அரேபிய வீடியோ!

பரவிய செய்தி

ஆந்திராவில் வெள்ளத்தில் காருடன் மாட்டிக்கொண்டு தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை தனது JCB வாகனத்தால் தைரியமாக மீட்டு வந்தார் முஹம்மது சுபஹான் பாய்…


image.png


X link

விரிவான விளக்கம்

கடந்த சில நாள்களாக குஜராத், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளம் இயல்பு வாழ்க்கையை அங்கே புரட்டி போட்டுள்ளது. இந்நிலையில்தான் ஆந்திராவில் வெள்ளத்தில் காருடன் மாட்டிக்கொண்டு தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை தனது JCB வாகனத்தால் தைரியமாக மீட்டு வந்தார் முஹம்மது சுபஹான் பாய் எனக் கூறி வீடியோ ஒன்று சமுக ஊடகங்களில் பரவி வருகிறது.



உண்மை என்ன ?


பரவிவரும் வீடியோவை  “Google Reverse Image Search” மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில்  அந்த வீடியோ ஆந்திராவில் எடுக்கப்பட்டதல்ல என்பதை அறியமுடிந்தது.


MSDAR_NEWS என்ற எக்ஸ் பக்கத்தில் பரவக்கூடிய இதே வீடியோவை ஏப்ரல் 27,2024 அன்று பதிவு செய்திருப்பதை கவனித்தோம்.



அப்பதிவு அரேபிய மொழியில் இருந்ததால் GoogleTranslate மூலம் மொழிப்பெயர்த்து பார்த்ததில், பிஷா கவர்னரேட்டில் (Bisha Governorate ) வெள்ளத்தில் சிக்கிய நான்கு பேரைக் காப்பாற்றிய சவுதி அரேபிய மனிதர் மற்றும் சிவில் பாதுகாப்பு (Civil Defense)  பிரிவைச் சேர்ந்த வீரர்கள் எனக்குறிப்பிட்டு இருந்தது.


மேலும் தேடியதில், சவுதி அரேபியாவை மையமாகக் கொண்டு இயங்கக்கூடிய NABD என்ற இணையதளப்பக்கத்திலும் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி அன்று இதே தகவலைக் குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருந்தனர்


மேலும்,  BBC அரபு என்ற யூடியூப் பக்கத்தில் ஏப்ரல் 30,2024 -மதீனா பகுதியில்  (Medina region) உள்ள (Al-Ais Governorate) அல்-அயிஸ் கவர்னரேட் பகுதியில் பெய்த கனமழையால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வெள்ளத்தால் தெருக்கள் மூடப்பட்டு, வாகனங்கள் அடித்து செல்லப்பட்டு, வட்டாட்சியர் பகுதியில் சில சாலைகள் இடிந்து விழுந்தன. ஆசிர்(Asir region). பகுதியில் உள்ள பிஷா கவர்னரேட்டில்(Bisha Governorate ) வெள்ளத்தில் சிக்கி இறக்கவிருந்த 4 பேரை பலத்த வெள்ளத்தின் நடுவில் புல்டோசரை ஓட்டி காப்பாற்றிய சவுதி குடிமகன் 'அய்த் பின் தகாஷ் அல்-அக்லாபி' (Ayed bin Daghash Al-Aklabi) என்று (Description) குறிப்பிட்டிருந்தது.




இவற்றிலிருந்து, இந்த சம்பவம் சவுதி அரேபியாவில் நடந்தது என்பது தெளிவாகிறது. 


முடிவு :


நம் தேடலில், வெள்ளத்தில் சிக்கியவர்களை ஜெசிபி எந்திரம் கொண்டு காப்பாற்றும் இந்த வீடியோ ஆந்திராவில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் தகவல் தவறானது. உண்மையில் இவை சவுதி அரேபியாவில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ.



பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க