யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
அரபுநாட்டில் அடுக்குமாடி கட்டிடம் கட்டி ஊழல்செய்த இஞ்சினீயர்கள் சூப்பர்வைசர்கள், காண்டிராக்டர்கள் உள்பட 60 ஊழல்வாதிகள் அனைவரையும் அவர்கள் கட்டிய கட்டிட இடிபாடுகளில் பள்ளம்தோண்டி சுட்டு புதைக்கும் காட்சி

விரிவான விளக்கம்
அரபு நாட்டில் இன்ஜினியர், சூப்பர்வைசர், காண்டிராக்டர் கட்டிடம் கட்டுவதில் ஊழல் செய்ததாகவும் அதில் தொடர்புடையவர்களைத் துப்பாக்கியால் சுட்டுப் புதைப்பதாகவும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக்கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடினோம். இதுதொடர்பாக ‘Espreso’ என்ற தளத்தில் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பரவக்கூடிய வீடியோவில் உள்ள காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

அச்செய்தியில் சிரியாவின் தலைநகரான Damascus-க்கு அருகில் 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 41 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வீடியோ குறித்து ‘The Guardian’ செய்தி வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனைக்கொண்டு Guardian தளத்தில் தேடியதில், பரவும் வீடியோ பற்றி 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி கட்டுரை ஒன்று வெளியாகி இருப்பதைக் காணமுடிந்தது. சிரியாவில் இரண்டு குழுக்களிடையே 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட அதிகார மோதலில் யார் பக்கமும் ஆதரவு தெரிவிக்காதவர்களை ஒரு குழு கொன்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தை ஊழல் செய்த பொறியாளருக்கு அரபு நாட்டில் அளிக்கப்பட்ட தண்டனை எனத் தவறாகப் பரப்புகின்றனர்.
முடிவு:
அரபு நாட்டில் கட்டிடம் கட்டுவதில் ஊழல் செய்த பொறியாளரைக் கொல்லும் வீடியோ எனப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல.