YouTurn

பறவைகளின் எச்சத்தால் கார்கள் பாழாகிறது என மரத்தில் ஆணிகளை பொருத்தியுள்ளனர் | எங்கே ?

பறவைகளின் எச்சத்தால் கார்கள் பாழாகிறது என மரத்தில் ஆணிகளை பொருத்தியுள்ளனர் | எங்கே ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

செல்வம் படைத்தவர்கள் தங்களின் சொகுசு கார்களை பறவைகளின் எச்சங்களில் இருந்து பாதுகாக்க அவற்றின் வசிப்பிடமான மரத்தில் ஆணிகளை வைத்து இருக்கின்றன. அதிக அளவில் ஆணிகள் படர்ந்து இருக்கும் மரமானது எங்கு உள்ளது என்பது குறித்த தேடுதலில் அது தொடர்பான சில செய்திகளை பார்க்க முடிந்தது. இங்கிலாந்து நாட்டின்...

பரவிய செய்தி

விலையுயர்ந்த கார்களில் பறவைகளின் எச்சம் விழுவதால், அதனை தடுக்க மரங்களில் பறவைகள் அமராதவாறு ஆணிகளை சிலர் வைத்துள்ளனர். மனிதர்கள் எத்தகைய கொடூரமான நிலைக்கும் செல்கிறான்.



 

விரிவான விளக்கம்

செல்வம் படைத்தவர்கள் தங்களின் சொகுசு கார்களை பறவைகளின் எச்சங்களில் இருந்து பாதுகாக்க அவற்றின் வசிப்பிடமான மரத்தில் ஆணிகளை வைத்து இருக்கின்றன. அதிக அளவில் ஆணிகள் படர்ந்து இருக்கும் மரமானது எங்கு உள்ளது என்பது குறித்த தேடுதலில் அது தொடர்பான சில செய்திகளை பார்க்க முடிந்தது.

இங்கிலாந்து நாட்டின் பிரிஸ்டோல் பகுதியில் வசிக்கும் சில செல்வந்தர்கள் தங்களின் BMW மற்றும் Audi உள்ளிட்ட விலையுர்ந்த சொகுசுக் கார்களை பறவைகளின் எச்சங்களில் இருந்து பாதுகாக்க அருகில் இருக்கும் மரங்களில் Anti bird spikes எனும் ஆணிகளை பறவைகள் அமர முடியாதவாறு பொருத்தி உள்ளனர்.



அங்கிருக்கும் பகுதியில் புறாக்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதால், மரங்களில் வந்து அமரும் பறவைகள் எச்சங்களை வெளியிடும் பொழுது கார்கள் பாழாகிறது. பறவைகளை அச்சுறுத்தி அங்கு வரவிடாமல் செய்ய மர பறவை பொம்மைகள் என பல முயற்சிகளை மேற்கொண்டு பயனில்லை. ஆனால், இந்த ஆணிகள் பறவைகளிடம் இருந்து மரங்களுக்கு கீழே இருக்கும் கார்களை பாதுகாக்கும் என அங்கு வசிக்கும் ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.



க்ரீன் பார்ட்டி கவுன்சிலர் Paula O' Rourke, தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருக்கும் மரத்தில் நிலத்திற்கான சொந்தக்காரர் இப்படி செய்வதாக தெரிவித்து இருந்தார். ஆகையால், இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.



பறவைகள் அதிக அளவில் அங்குள்ள குடியிருப்பு பகுதிக்கு வருவதால் மர பொம்மைகள் உள்ளிட்ட முறையில் பறவைகளை பயமுறுத்த முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அதில் பயனில்லை என்பதால் மரங்களில் ஆணிகளை பொருத்தி உள்ளனர். பிரிஸ்டோல் நகரில் உள்ள இரண்டு மரங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளின் ஜன்னல் விளிம்புகள் உள்ளிட்டவைகளிலும் ஆணிகள் பொருத்தப்பட்டு உள்ளன.


எழுத்தாளரும் மற்றும் பறவைகள் மீதான அன்பு கொண்டவரான Jennifer Garrett, இதனை வனத்தின் மீதான நம் போர் என ட்விட்டரில் விமர்சித்து பதிவிட்டு இருந்தார்.





மரங்களில் ஆணிகளை பொருத்தி இருப்பது தொடர்பாக 2017-ல் செய்திகள் மட்டுமின்றி, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியது. பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…