YouTurn

சுதந்திரத்திற்காகப் போராடிய தமிழர்கள் பற்றி அண்ணாமலை கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !

சுதந்திரத்திற்காகப் போராடிய தமிழர்கள் பற்றி அண்ணாமலை கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

சுதந்திரத்திற்கு போராடிய தமிழர்களை விட வட இந்தியர்களைத்தான் உலகம் அறியும். வட இந்தியர்களின் தியாகத்தை தமிழர்கள் போற்றி வணங்க வேண்டும் - அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக.

விரிவான விளக்கம்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற தமிழர்களை விட வட இந்தியர்களைத்தான் உலகம் அறியும் என்றும், வட இந்தியர்களின் தியாகத்தை தமிழர்கள் போற்றி வணங்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பிபிசி தமிழ் உடைய நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.



Twitter link | Archive link



உண்மை என்ன ? 

பிபிசி தமிழ் சேனலுக்கு தமிழக பாஜக தலைவர்  அண்ணமாலை அளித்த பேட்டிக் குறித்து தேடுகையில், " தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில் பாரத பிரதமரின் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி இந்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேட்டறிந்தார். நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார் " என அண்ணாலை கூறியதாக ஜனவரி 17-ம் தேதி நியூஸ் கார்டு வெளியாகி இருந்தது.



Facebook link 



பிபிசி வெளியிட்ட மேற்காணும் நியூஸ் கார்டில் போலியான கருத்தை எடிட் செய்து வதந்தியை பரப்பி வருகிறார்கள். இதேபோல், குழந்தைகளின் ரியாலிட்டி ஷோ தொடர்பாக அண்ணாமலை கூறியதாக பல போலியான எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டுகள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டன.

மேலும் படிக்க :  குழந்தைகளின் ரியாலிட்டி ஷோ விவகாரத்தில் அண்ணாமலை பற்றிப் பரவும் போலிச் செய்திகள் !

முடிவு : 

நம் தேடலில், சுதந்திரத்திற்கு போராடிய தமிழர்களை விட வட இந்தியர்களைத்தான் உலகம் அறியும், வட இந்தியர்களின் தியாகத்தை தமிழர்கள் போற்றி வணங்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரப்பப்படும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க