YouTurn

கருப்பு எம்ஜிஆர் என அண்ணாமலைக்கு போஸ்டர் ஒட்டினார்களா ?

கருப்பு எம்ஜிஆர் என அண்ணாமலைக்கு போஸ்டர் ஒட்டினார்களா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

விரிவான விளக்கம்

சென்னையில் ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கு செல்லும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை வரவேற்கும் வகையில் " ராமாவரம் வருகை தரும் எங்கள் கருப்பு எம்ஜிஆர் " என அதிமுக கொடியின் வண்ணத்தில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் மீம்ஸ் உடன் வைரலாகி வருகிறது.


உண்மை என்ன ?

சமூக வலைதளங்களில் பரவும் படத்தில் உள்ள போஸ்டர் பகுதியை மட்டும் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், மதுரையில் அதிகரித்து வரும் போஸ்டர் கலாச்சாரம் பற்றி 2021 ஜூலை 15-ம் தேதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியான போஸ்டர் புகைப்படம் கிடைத்தது.



அதில், நடிகர் ரஜினிகாந்த் உடைய அரசியல் பயணம் குறித்து அவரது ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரே இடம்பெற்று இருக்கிறது. தற்போது வைரலாகும் அண்ணாமலை போஸ்டர் அதன் மீதே இடம்பெற்று இருக்கிறது.



" ராமாவரம் வருகை தரும் எங்கள் கருப்பு எம்ஜிஆர் " என அண்ணாமலையின் முகத்தை எம்ஜிஆர் படத்துடன் வைத்து ஒரு போலியான போஸ்டரை உருவாக்கி சுவற்றில் ஒட்டப்பட்டது போல் தவறாக பரப்பி இருக்கிறார்கள்.

முடிவு :

நம் தேடலில், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு " ராமாவரம் வருகை தரும் எங்கள் கருப்பு எம்ஜிஆர் " என போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளதாக பரவும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க