YouTurn

பேரறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் கூடிய மக்கள் எனப் பரவும் தவறான புகைப்படம் !

பேரறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் கூடிய மக்கள் எனப் பரவும் தவறான புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

கலப்பு

பரவிய செய்தி

இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதியான சி.என்.அண்ணாதுரையின் இறுதி ஊர்வலத்தில் வரலாற்றிலேயே அதிக மக்கள் கலந்து கொண்டனர். 1969-ல் அவரைப் பார்க்க 15 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சென்னையில் கூடினர்.



Archive link

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் 15 மில்லியன் மக்கள் கலந்து கொண்டதே வரலாற்று நிகழ்வாக இருந்து வருகிறது என WTF Facts எனும் டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிடப்பட்டது.

உண்மை என்ன?

பேரறிஞர் அண்ணாவின் இறப்பின் போது அவரது உடலை காண 1.5 கோடி பேர் (15 மில்லியன்) வருகை தந்து கூடியதாக கின்னஸ் சாதனையில் இடம்பெற்றது. கின்னஸ் உலக சாதனை இணையதளத்தில் " மிகப்பெரிய இறுதி ஊர்வலக் கூடல் " எனும் பிரிவில் அண்ணாவின் இறுதி ஊர்வலம் இடம்பெற்றுள்ளது.



ஆனால், அண்ணாவின் இறுதி ஊர்வலம் குறித்து பதிவிட்ட டிவிட்டர் பதிவில் பயன்படுத்திய புகைப்படம் தவறானது.

2015-ல் தி டெலிகிராப் இணையதளத்தில் " மனித வரலாற்றில் 10 மிகப்பெரிய கூடல் " எனும் தலைப்பில் வெளியான செய்தியில் 1989-ல் ஈரான் அரசியல்வாதி அயடோல்லா கோமெய்னி இறந்த போது 10 மில்லியன் மக்கள் கூடியதாக இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.



முடிவு : 

நம் தேடலில், பேரறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலத்தின் போது 15 மில்லியன் மக்கள் கூடியதாக கின்னஸ் உலக சாதனை படைத்தது உண்மையே.

ஆனால், அண்ணாவின் இறுதி ஊர்வலம் எனப் பரவும் புகைப்படம் தவறானது. அது ஈரான் அரசியல்வாதி இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க