YouTurn

தமிழக எம்.பிக்களின் நாடாளுமன்ற வருகைப்பதிவு சறுக்கல் !

தமிழக எம்.பிக்களின் நாடாளுமன்ற வருகைப்பதிவு சறுக்கல் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் தேவைகள், பிரச்சனைகள் பற்றி நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கு கொண்டு விவாதிக்க வேண்டும், கேள்விகள் எழுப்ப வேண்டும். மாநில வாரியாக இந்திய எம்பிக்களின் நாடாளுமன்ற வருகைப் பதிவு மற்றும் எந்தெந்த விவாதங்களில் பங்கு கொண்டனர், எதற்கெல்லாம்...

பரவிய செய்தி

தமிழ்நாட்டு எம்.பிக்களின் நாடாளுமன்ற செயற்பாடுகள் குறித்த தர வரிசையில் அதிமுக எம்.பி சத்யபாமா முதல் இடத்திலும், அன்புமணி ராமதாஸ் இறுதி இடத்திலும் உள்ளனர்.

விரிவான விளக்கம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் தேவைகள், பிரச்சனைகள் பற்றி நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கு கொண்டு விவாதிக்க வேண்டும், கேள்விகள் எழுப்ப வேண்டும்.

மாநில வாரியாக இந்திய எம்பிக்களின் நாடாளுமன்ற வருகைப் பதிவு மற்றும் எந்தெந்த விவாதங்களில் பங்கு கொண்டனர், எதற்கெல்லாம் கேள்விகள் எழுப்பினார்கள் உள்ளிட்டவை அடங்கிய முழு விவரத்தையும் PRS legislative Research-ல் வெளியிடப்பட்டது.



இத்தகைய தகவலில் தமிழகத்தின் 39 எம்பிக்களில் குறைவான வருகைப் பதிவைக் கொண்டது பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆவார். அன்புமணி அவர்களின் நாடாளுமன்ற வருகைப்பதிவு 46% மட்டுமே.

2014-ல் இருந்து இன்றுவரை அன்புமணி எம்.பி நாடாளுமன்றத்தில் நீட் பிரச்சனை, விவசாயம் சார்ந்த முன்னேற்றம், மீனவர் பிரச்சனை, மது உள்ளிட்ட 12 விவாதங்களில் பங்கேற்று உள்ளார். மொத்தம் 50 கேள்விகளை எழுப்பி உள்ளார். 2018-ல் நீட் தொடர்பான விவாதத்தில் மட்டுமே கலந்து கொண்டதாக PRS ஆய்வில் தெரிகிறது.



தமிழக எம்.பிக்களின் தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் திருப்பூர் எம்.பி சத்யபாமா 87 சதவீத வருகைப்பதிவையும், 119 விவாதங்களில் கலந்து கொண்டு 412 கேள்விகளை எழுப்பியுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும், தமிழக எம்பிக்களில் ஒருவர் கூட 90 சதவீத வருகைப்பதிவைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அளவில் எம்.பிக்களின் சராசரி வருகைப்பதிவு 80 சதவீதம். தமிழக எம்பிக்களின் சராசரி வருகைப்பதிவு 78 % , விவாதங்கள் 43.6%, 404 கேள்விகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

“ பொதுவாக, விவாதங்களில் பங்கு கொள்வது மற்றும் கேள்விகள் எழுப்புவதால் மட்டுமே தொகுதிகளில் சிறப்பான பணிகளை செய்கிறார்கள் என நினைத்து எம்.பிக்களின் செயல்திறனை முடிவு செய்ய முடியாது. அதேநேரத்தில், நாடாளுமன்ற கூட்டங்களிலும் எம்பிக்கள் பங்கேற்க வேண்டியதும் அவசியம் “ என Association of Democratic Reforms நிறுவனர் ஜக்தீப் சோக்கர் தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிச்சயம் விவாதங்களில் கலந்து கொண்டு மக்கள் பிரச்சனைகள் குறித்த கேள்விகளை எழுப்ப வேண்டும். இதில், சராசரியை விட குறைந்து இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. மக்களுக்கான பணியினை சிறப்பாக செய்தல் என்பதே தலையாய கடமையாகும்.

சுருக்கமாக

PRS legislative Research-ல் தமிழக எம்பிக்களின் நாடாளுமன்ற செயற்பாடுகளில், எம்.பி சத்யபாமா 87% வருகைப்பதிவு உடன் முதல் இடத்திலும், அன்புமணி ராமதாஸ் 46% வருகைப் பதிவுடன் இறுதி  இடத்திலும்  உள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. தேசிய அளவில் தமிழக எம்.பிக்களின் சராசரி வருகைப்பதிவு 78%  மட்டுமே.

 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.