YouTurn

ஜப்பானில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் எனப் பரவும் பழைய வீடியோ!

ஜப்பானில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் எனப் பரவும் பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய காணொளி

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2024 ஆம் ஆண்டிலிருந்தே பரவி வரும் வீடியோ சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பரவிய செய்தி

ஜப்பான் கடற்கரையில் 7.6 ரிக்டர் அதிர்ச்சி – சுனாமி எச்சரிக்கை வெளியானது!



Facebook Link | Archive Link

விரிவான விளக்கம்

ஜப்பானின் ஹோன்ஷூ தீவின் வடக்குப் பகுதியில் பசிபிக் பெருங்கடலில் டிசம்பர் 08 அன்று 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.6 ஆகப் பதிவானதாக, அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 33 பேர் படுகாயமடைந்தனர்.


இந்நிலையில் ஜப்பான் நிலநடுக்கம் ஏற்பட்ட காட்சிகள் என்று குறிப்பிட்டு 20 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் சாலைகளுடன் சேர்ந்து மின்கம்பங்களும் பயங்கரமாக அதிர்வதை வீடியோவில் தெளிவாகக் காண முடிகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது தற்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது. 


கடந்த 2024 ஆம்ஆண்டு ஜூன் மாதம் பரவி வரும் இதே வீடியோ, “நிலநடுக்கம்“ என்று குறிப்பிட்டு “GTA VI“ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 



இதே போன்று, “2024 ஆம் ஆண்டு ஜப்பானில் நிலநடுக்கம்” என்று குறிப்பிட்டு பரவி வரும் காட்சிகளைக் கொண்ட இதே வீடியோ “danielskenty“ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 



இதன் மூலம் கடந்த 2024 ஆம் ஆண்டிலிருந்தே பரவி வரும் வீடியோ சமூக ஊடகங்களில் "ஜப்பானில் நிலநடுக்கம்" என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது. இந்நிலையில் பழைய வீடியோவை, ஜப்பானில் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட காட்சிகள் என்று குறிப்பிட்டு பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.  


முடிவு: 


நம் தேடலில் "ஜப்பானில் டிசம்பர் 08 அன்று 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காட்சி" என்று குறிப்பிட்டு பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதல்ல என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க