யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பிரம்மபுரி வனப்பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகை அருகே ஒருவரை புலி கடித்து இழுத்து செல்வது போல பரவும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது
பரவிய செய்தி
பிரம்மபுரி வனப்பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகை அருகே ஒருவரை புலி தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்
விரிவான விளக்கம்
“மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்திரப்பூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரி வனப்பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகை அருகே ஒருவரை புலி இழுத்து சென்று விட்டது. அதன் சிசிடிவி காட்சிகள் தான் இவை” என்று கூறி வீடியோ ஒன்று வாட்சாப் போன்ற சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் வீட்டு வாசலில் அமர்ந்திருக்கும் ஒருவரை புலி வந்து கடித்து இழுத்து செல்வதை தெளிவாகக் காண முடிகிறது.
बेहद डरावनी वीडियो।pic.twitter.com/WtRDKKacMc
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், பரவி வரும் காட்சிகள் உண்மையாக நடைபெற்ற சம்பவம் அல்ல என்பதை அறிய முடிந்தது.
"Loksatta" ஊடகப் பக்கத்தில், நவம்பர் 08, 2025 அன்று பரவி வரும் வீடியோ காட்சிகளைக் குறிப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், "மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரி பகுதியில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகை அருகே வனக் காவலரை புலி தாக்கும் வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோ முற்றிலும் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு (AI) நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது" என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், சந்திரபூர் பகுதி வனபாதுகாவலர், “மகராஷ்டிரா மாநிலத்தின் பிரம்மபுரி வனப்பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகை அருகே அக்டோபர் 31, 2025 அன்று ஒருவரை புலி கடித்து இழுத்து செல்வது போல பரவும் வீடியோ உண்மையானதல்ல. பரவி வரும் வீடியோ, AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. பிரம்மபுரி வனப் பிரிவில் இதுபோன்ற எந்த சம்பவமும் நடக்கவில்லை” என்று கூறி விளக்கம் அளித்துள்ளார்.

இதே போன்று, பிரம்மபுரி வனப்பகுதியில் ஒருவரை கடித்து இழுத்து சென்ற புலி, அவரை மீண்டும் அவர் வீட்டிற்கே வந்து விட்டு சென்றுவிட்டது என்று கூறி மற்றொரு வீடியோவையும் பலர் சமூக ஊடகங்களில் கேலியாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.
The famous Maharashtra Chandrapur checkpost tiger brings back the person and gives him water as he was thirsty and afraid for life
#Tiger #AI
🤣🤣🤣🤣🤣🤣 pic.twitter.com/hiXth8hYkD
மேலும் பரவி வரும் வீடியோ குறித்து, "PIB in Maharashtra" எக்ஸ் பக்கத்திலும் பரவி வரும் வீடியோ போலியானது தான் என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளனர்.
A video is being shared widely on social media claiming to be the CCTV footage from Brahmapuri, Chandrapur (Maharashtra) showing an incident inside a forest guest house.
#FAKE
❌The claim is
✅The video is AI-generated and not an actual CCTV recording.
✅ No such incident has… pic.twitter.com/aCd0WSU8QJ
முடிவு:
நம் தேடலில், “பிரம்மபுரி வனப்பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகை அருகே வன காவலர் ஒருவரை புலி தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்” எனப் பரவும் வீடியோ போலியானது என்பது உறுதியாகிறது.