யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ரஷ்ய அதிபர் புதின் விமானத்தில் பகவத்கீதை படிப்பதாகப் பரவி வரும் புகைப்படம் உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.
பரவிய செய்தி
பிரதமர் மோடியால் வழங்கப்பட்ட அன்பான பரிசான ஸ்ரீமத் பகவத் கீதை நூலை, அதிபர் புதின் வாசித்துக்கொண்டிருக்கும் காட்சி.
விரிவான விளக்கம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 4 அன்று இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார். 23வது ஆண்டு இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் வருகை தந்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி, புதினுக்கு ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட பகவத்கீதை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரதமர் மோடி வழங்கிய பகவத்கீதையை, விமானத்தில் ரஷ்ய அதிபர் புதின் படிக்கும் காட்சி என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
The lovely gift given by India
the Shrimad Bhagavad Gita.
President Putin reading the
Shrimad Bhagavad Gita. pic.twitter.com/mnuNBpeY7I
Tough time ahead for Ukraine pic.twitter.com/HFW9ITfnna
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படம் குறித்து ஆய்வு செய்ததில், இது குறித்த எந்த செய்தியும் ஊடகங்களில் வெளியிடப்படவில்லை.
எனவே பரவி வரும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழவே, இது குறித்து “Hive Moderation” இணையதளப் பக்கத்தில் ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில், இது 99.9% AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது தான் என்பது உறுதியானது.

இதே போன்று, “Sight Engine“ இணையதளப் பக்கத்திலும் பரவி வரும் புகைப்படத்தை பதிவேற்றி ஆய்வு செய்தோம். இங்கும் இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது தான் என்ற முடிவையே வழங்கியது.

முடிவு:
நம் தேடலில், பிரதமர் மோடி வழங்கிய பகவத்கீதையை, விமானத்தில் ரஷ்ய அதிபர் புதின் படிக்கும் காட்சி என்று குறிப்பிட்டு பரவும் புகைப்படம் போலியானது என்பது உறுதியாகிறது.