YouTurn

இந்திய வரைபடத்தை அமெரிக்கன் சிஇஓ மறுவடிவமைத்ததாக பரவும் பழைய வரைபடம் !

இந்திய வரைபடத்தை அமெரிக்கன் சிஇஓ மறுவடிவமைத்ததாக பரவும் பழைய வரைபடம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்தியாவின் மக்கள் தொகை மற்றும் பரப்பளவு என்பது பல சிறு நாடுகளை உள்ளடக்கும் அளவிற்கு பெரியது. மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவது சவாலான காரியம். இந்திய மாநிலங்களின் மக்கள் தொகை அளவிற்கு சமமான பிற நாடுகளை ஒப்பிட்டு கோவிட்-19 நெருக்கடியில் இந்தியா...

பரவிய செய்தி

இந்தியாவை நிர்வகிப்பது என்பது 50 நாடுகளை நிர்வகிப்பது போல.. இந்திய மாநிலங்களின் மக்கள் தொகையைக் குறித்து ஓர் அமெரிக்க தலைமை நிர்வாக அதிகாரியால் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இந்திய வரைபடமாகும். இது சில நாடுகளின் மக்கள் தொகைக்கு கிட்டத்தட்ட சமம். பல நாடுகளின் கோவிட்-19 நிலைமையை இந்தியா மறைமுகமாகக் கையாளுகிறது என்பதை அவர் தனது ஊழியர்களுக்கு விளக்க முயற்சித்து உள்ளார். இது சிக்கலை திறமையான முறையில் நிர்வகிப்பது பற்றியது.



Facebook link | archive link

விரிவான விளக்கம்

இந்தியாவின் மக்கள் தொகை மற்றும் பரப்பளவு என்பது பல சிறு நாடுகளை உள்ளடக்கும் அளவிற்கு பெரியது. மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவது சவாலான காரியம்.

இந்திய மாநிலங்களின் மக்கள் தொகை அளவிற்கு சமமான பிற நாடுகளை ஒப்பிட்டு கோவிட்-19 நெருக்கடியில் இந்தியா எப்படி சமாளிக்கிறது என்பதை அமெரிக்க நாட்டைச் சேர்ந்த சிஇஓ ஒருவர் தனது ஊழியர்களுக்கு விளக்கி கூறியதாக மேற்காணும் புகைப்படம் இந்திய அளவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

கோவிட்-19 தொடர்பாக இந்திய வரைபடத்தை அமெரிக்க சிஇஓ மறுவடிவமைப்பு செய்ததாக நம்பத்தகுந்த தகவல்கள் அல்லது செய்தி ஏதும் இல்லை. வைரல் செய்யப்படும் வரைபடம் சமீபத்தியவை அல்ல, 4 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வரைபடம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.



Twitter link | archive link 

2016-ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி அமித் ரஞ்சன் என்பவரின் ட்விட்டர் பக்கத்தில் பிற நாடுகளுடன் ஒப்பிடப்பட்ட இந்திய வரைபடத்தின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. எனினும், அதில் அந்த வரைபடத்தை வரைந்தது யார் என்ற விவரங்கள் இல்லை.



Twitter link | archive link

வைரல் செய்யப்படும் இந்திய வரைபடத்தினை உருவாக்கியவர் யார் என்ற விவரம்  தெரியவில்லை. அத்தகைய வரைபடத்தில், இந்திய மாநிலங்களின் மக்கள் தொகையும், அதற்கு சமமான மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பெயர்களும் ஒற்றுமைப்படுத்தப்பட்டு உள்ளன. 4 ஆண்டுகள் பழைய வரைபடத்தினை கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்துடன் தொடர்புப்படுத்தி வைரல் செய்து வருகின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

நம்முடைய தேடலில் இருந்து, கோவிட்-19 நெருக்கடியில் அமெரிக்காவைச் சேர்ந்த சிஇஓ இந்திய வரைபடத்தை மறுவடிவமைப்பு செய்ததாக பரவும் தகவல் தவறானது என்பதை அறிய முடிந்தது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…