YouTurn

கல்வி அமைச்சருக்காக காத்திருந்ததா ஆம்புலன்ஸ்.. பாலத்தைப் பற்றி தெரியாமல் செய்தி வெளியிட்ட தினமலர் !

கல்வி அமைச்சருக்காக காத்திருந்ததா ஆம்புலன்ஸ்.. பாலத்தைப் பற்றி தெரியாமல் செய்தி வெளியிட்ட தினமலர் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

கல்வி அமைச்சர் கார் செல்ல காத்திருந்த ஆம்புலன்ஸ்

விரிவான விளக்கம்

கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்புகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்ய கும்பகோணம் அணைக்கரை பகுதிக்கு 25 கார்களுடன் சென்ற போது, பாலத்தின் மறுபக்கத்தில் வந்த ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்தாக வைரல் வீடியோ குறித்து தினமலர் நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டது.



Youtube link | Archive link



அமைச்சர் அன்பில் மகேஷ் வாகனங்கள் செல்வதற்காக ஆம்புலன்ஸ் நீண்ட நேரம் காத்திருந்ததாக தினமலரின் செய்தியை தமிழக பாஜகவினர் சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர். தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர்," இதெல்லாம் எத்தனை நாளைக்கு அன்பில் மகேஷ் ?" என ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார் . இந்த வீடியோ தற்போது இந்தியா டுடே உள்ளிட்ட ஆங்கில ஊடகங்களிலும் வெளியாகி வருகிறது.



Twitter link 



உண்மை என்ன ?

கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அணைக்கரையில் உள்ள பாலம் பல ஆண்டுகளாக ஒரு வழிப் பாதையாகவே இருந்து வருகிறது. ஒரு பக்கத்தில் இருந்து வாகனங்கள் வரும் போது எதிராக வாகனங்கள் செல்வது கடினம். ஆகையால், மறுபக்கத்தில் வாகனங்கள் வரும் காத்திருந்தே செல்ல முடியும். அந்த பாலத்தில் போக்குவரத்தை நெறிப்படுத்த காவலர்களும் பணியில் இருப்பார்கள். இது அந்த வட்டார மக்களுக்கு நன்கு தெரியும்.

அணைக்கரை பாலத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அதிகாரிகள் வரும் கார்கள் முன்பே நுழைந்து விட்டதால் எதிரே வந்த ஆம்புலன்ஸ் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.



சில ஆண்டுகளுக்கு முன்பாக அணைக்கரை பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டதால் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. பின்னர், 3 ஆண்டுகளுக்கு பிறகு 2021-ல் இருந்து பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.





முடிவு : 

நம் தேடலில், கும்பகோணம் அணைக்கரை பாலம் ஒரு வழிப் பாதை என அறியாமல், கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கார்கள் செல்வதற்காக நீண்ட நேரம் ஆம்புலன்ஸ் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளதாக ஆம்புலன்ஸ் காத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க