YouTurn

கொரோனா வழிமுறைகள் இல்லாமல் நடந்த அம்பானி பேரன் வரவேற்பு நிகழ்ச்சியா ?

கொரோனா வழிமுறைகள் இல்லாமல் நடந்த அம்பானி பேரன் வரவேற்பு நிகழ்ச்சியா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி


முகேஷ் அம்பானிக்கு பேரன் பிறந்ததற்காக அவரது வீட்டில் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. கொரானா பணக்காரர்களையோ, சினிமாக்காரர்களையோ, அரசியல்வாதிகளையோ, ஒன்றும் செய்யாது அவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் அல்ல. ஆனால் சாமானிய மக்கள் மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.200 அபராதம் இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள். கொரானா என்பது என்ன? இதனால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? என்று




Facebook link | Archive link

விரிவான விளக்கம்

முகேஷ் அம்பானிக்கு பேரன் பிறந்துள்ளதாக வெளியான புகைப்படம் ஊடகங்களில் மட்டுமின்றி சமூக வலைதளங்களில் வைரலாகின. பேரனிற்காக முகேஷ் அம்பானி ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் குறித்த அச்சமின்றி எந்தவொரு விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் கலந்து கொண்டதாக இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2.20 நிமிட வீடியோவில், மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அமிதாப் பச்சன், அமீர்கான், நடிகைகள் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் கலந்து கொண்டு இருப்பதை காண முடிகிறது.



உண்மை என்ன ? 

முகேஷ் அம்பானி பேரன் வரவேற்பு விழா என பரவும் வீடியோ தேடுகையில், அது 2019 செப்டம்பர் மாதம் முகேஷ் அம்பானி ஏற்பாடு செய்த விநாயகர் சதூர்த்தி விழாவின் போது எடுக்கப்பட்ட வீடியோ என அறிய முடிந்தது.



கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி இந்தியன்எக்ஸ்பிரஸ்ஆன்லைன் யூடியூப் சேனலில் " அம்பானி விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டம் " என வெளியான 2.59 நிமிட வீடியோவில் வைரலாகும் வீடியோவில் இடம்பெற்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க : பிரதமர் மோடி முகேஷ் அம்பானி பேரனைக் காணச் சென்றதாக பரவும் பழைய புகைப்படம் !

இதற்கு முன்பாக, முகேஷ் அம்பானி பேரனைக் காண்பதற்காக பிரதமர் மோடி நேரடியாக மருத்துவமனைக்கே சென்றதாக பழைய புகைப்படத்தை வைரலாக்கினர். அதேபோல், முகேஷ் அம்பானியின் ஜியோ அரிசி, பருப்பு விற்பனைக்கு வந்தாக தவறான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது குறித்தும் நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்கJIO அரிசி, பருப்பு வந்து விட்டதா ?| இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் உண்மையா ?

முடிவு : 

நம் தேடலில், முகேஷ் அம்பானிக்கு பேரன் பிறந்ததற்காக அவரது வீட்டில் கொரோனா வழிமுறைகள் இல்லாமல் கொண்டாட்டங்கள் நடைபெறுவதாக வைரலாகும் வீடியோ கடந்த ஆண்டு முகேஷ் அம்பானி குடும்பத்தினர் விநாயகர் சதூர்த்தி கொண்டாடிய போது எடுக்கப்பட்ட வீடியோ என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க