YouTurn

2025ஆம் ஆண்டு முதல் அனைத்து சனி ஞாயிறுகளிலும் அரசு விடுமுறை என்று பரப்பப்படும் தகவல்! உண்மை என்ன?

2025ஆம் ஆண்டு முதல் அனைத்து சனி ஞாயிறுகளிலும் அரசு விடுமுறை என்று பரப்பப்படும் தகவல்! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும் இதுபோல் அனைத்து சனி மற்றும் ஞாயிறுகளிலும் அரசு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமான ஒன்று தான்.

பரவிய செய்தி

2025 ஜனவரி முதல் அனைத்து சனி ஞாயிறுகளிலும் அரசு விடுமுறை என்று தமிழக அரசு அறிவுப்பு @tenkasi_appatakkars #goverment #tamilnadu #news #shorts #memes #tenkasi #tenkasiappatakkars

Instagram Link

விரிவான விளக்கம்

ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு அடுத்த ஆண்டிற்கான  பொது விடுமுறைகளை அறிவிப்பது வழக்கம். அதன்படி, தமிழ்நாடு அரசும் வருகின்ற 2025ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறைகளை அறிவித்து கடந்த நவம்பர் 22ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு, ‘2025 ஆண்டிலிருந்து அனைத்து சனி ஞாயிறுகளிலும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக’ தகவல் பரப்பப்படுகிறது.

 

https://www.instagram.com/p/DDkOJMbyRF8/


உண்மை என்ன?

 

பரப்பப்படும் தகவலை அடிப்படையாகக் கொண்டு, 2025ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறைகளை அறிவித்து வெளியிடப்பட்ட அரசாணையை சோதித்தபோது, ”தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் 2025 ஆம் ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை” என்று குறிப்பிடப்பட்டிருப்பதை பார்க்கிறோம்.

 

இதே போல், 2024ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறைகளை அறிவித்து வெளியிடப்பட்ட அரசாணையை சோதித்ததில், அதிலும் “தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் 2024 ஆம் ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை” என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

 

2022ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறைகள் குறித்த அரசாணையிலும் கூட, ”ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை” என்றே குறிப்பிடப்பட்டிருப்பதை காண்கிறோம்.

 

இதிலிருந்து, ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாக ஒன்றுதான் என்பதும், 2025 ஆம் ஆண்டிலும் அவ்வாறு அறிவிக்கப்படுவது புதிதான ஒன்றல்ல என்பதும் தெளிவாகிறது.

 

முடிவு:

 

2025 ஆண்டிலிருந்து அனைத்து சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளிலும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக திரித்துப் பரப்பப்படுகிறது. இவ்வாறு அனைத்து சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளிலும் அரசு விடுமுறை அறிவிக்கப்படுவது வழமையான ஒன்றுதான்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.