YouTurn

‘சீனாவில் விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த காட்சி’ எனப் பரவும் தவறான செய்தி!

‘சீனாவில் விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த காட்சி’ எனப் பரவும் தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது சீனாவில் உள்ள “Longfor Chongqing Xicheng Paradise Walk” என்ற மாலில் மேற்கூரை இடிந்து விழுந்த போது எடுக்கப்பட்ட வீடியோ. இதை விமான நிலையம் என்று கூறி தவறாக திரித்துப் பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

சீனாவில் விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது. இதுதான் வளர்ந்த சீனாவின் உண்மை நிலை. சீன தயாரிப்புகள் முதல் சீன விமான நிலையங்கள் வரை, சீனாவில் எதுவும் நீடித்து நிலைக்காது, அத்தனையும் டூப்ளிகேட்..

X Link | Archive Link

விரிவான விளக்கம்

சீனாவில் விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழும் காட்சி என்று கூறி 33 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில், சேதமடைந்த மேற்கூரை ஒன்று இடிந்து விழுந்ததில், இடிந்த பகுதியில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை தெளிவாகக் காண முடிகிறது.




உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில் இது சீனாவில் எடுக்கப்பட்ட வீடியோ தான் என்பதை உறுதிபடுத்த முடிந்தது. 


ஹுனான்” என்ற சீன ஊடகப் பக்கத்தில் பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு, ஜூலை 08 அன்று செய்தி வெளியிட்டிருந்தனர். அதில், “சீனாவின் சோங்கிங்கில் பெய்த கனமழையால் வணிக வளாகங்களில் குழாய்கள் உடைந்து விழுந்தன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை, அவசரகால பழுதுபார்ப்பு பணிகள் அங்கு நடைபெற்று வருகின்றன“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 



இதே போன்று, சீனாவின் “சிச்சுவான்” என்ற ஊடகப் பக்கத்திலும் பரவி வரும் வீடியோ, சோங்கிங் என்ற பகுதியில் உள்ள “Longhu Chongqing Xicheng Tianjie” என்ற வணிக வளாகத்தில் B1 தளத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இது என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் ஜூலை 8 ஆம் தேதி, சோங்கிங்கில் ஏற்பட்ட கடுமையான மழையால் மாலில் உள்ள சில பொது குழாய்கள் சேதமடைந்தன என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 



இதன் மூலம் சீனாவில் உள்ள “Longfor Chongqing Xicheng Paradise Walk” என்ற மாலில் மேற்கூரை இடிந்து விழுந்த போது எடுக்கப்பட்ட வீடியோவை, விமான நிலையம் என்று கூறி தவறாக திரித்துப் பரப்புகின்றனர் என்பது தெளிவாகிறது. 


முடிவு: 


நம் தேடலில், சீனாவில் விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழும் காட்சி எனப் பரவும் வீடியோ, சீனாவில் வணிக வளாகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தபோது எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க