யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
கலாநிதிமாறன் மகள் காவ்யாமாறன். இருநூறு உபீஸ் இதையும் பார்த்து ஆனந்த கூத்தாடும்..

X Link | Archive Link

X Link | Archive Link
விரிவான விளக்கம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது தகுதிச்சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இந்தியன் பரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் 17வது சீசனுக்கான இறுதிப்போட்டியில் நாளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதவுள்ளது.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன், திருமணமான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஐடன் மார்க்ரமிற்கு முத்தமிட்டதாகக் கூறி புகைப்படமும், வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படம் மற்றும் வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், புகைப்படத்தில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஐடன் மார்க்ரமுடன் இருப்பவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் இல்லை என்பதை அறிய முடிந்தது.
காவ்யா மாறனின் சமூக ஊடகப் பக்கங்கள் குறித்து தேடியதில், அவர் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற எந்தவொரு சமூக ஊடகப் பக்கத்திலும் கணக்கு வைத்திருக்கவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஐடன் மார்க்ரம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது தனது மனைவி நிக்கோலை முத்தமிடும் வீடியோவையும் காண முடிந்தது.

எனவே தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஐடன் மார்க்ரமின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்து பார்த்தோம். அதில் அவர், தன்னுடைய மனைவி நிக்கோல் டேனியல் மார்க்ரமுடன் SRH அணியின் ஐபிஎல் உடையுடன் இருக்கும் புகைப்படத்தைக் காண முடிந்தது.

மேலும் நிக்கோல் டேனியல் மார்க்ரமின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள புகைப்படத்திலும், இருவரும் ஐபில் உடை அணிந்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளதைக் பார்க்க முடிந்தது.
மேலும் பரவி வரும் புகைப்படத்தையும், நிக்கோல் டேனியல் மார்க்ரம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படத்தையும் ஆய்வு செய்து பார்த்ததில், இரண்டு புகைப்படத்திலும் உள்ள பெண்ணின் கையில் உள்ள வெள்ளை நிறக் கைக்கடிகாரம் ஒத்துப் போவதையும் தெளிவாகக் காண முடிகிறது.

எனவே ஐபிஎல் கிரிக்கெட் மைதானத்தில் ஐடன் மார்க்ரம் தன்னுடைய மனைவி நிக்கோல் டேனியல் மார்க்ரமை முத்தமிடும் வீடியோவை, சிலர் SRH அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் திருமணமான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஐடன் மார்க்ரமை முத்தமிடுவதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை தெளிவுபடுத்த முடிகிறது.
மேலும் படிக்க: ‘இது கிரிக்கெட் மாஃபியாவான பிசிசிஐ-க்கு எதிரான வெற்றி’ என ரிக்கி பாண்டிங் கூறியதாகப் பரவும் வதந்தி!
மேலும் படிக்க: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் தனது சகோதரியை திருமணம் செய்ததாகப் பரவும் வதந்தி !
முடிவு:
நம் தேடலில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன், திருமணமான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஐடன் மார்க்ரமிற்கு முத்தமிட்டதாகக் கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.

கலாநிதிமாறன் மகள் காவ்யாமாறன்
கர்மா என்பது யாதெனில் அன்னைக்கு நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் நடக்காத ஒன்றை சன் தொலைக்காட்சியில் அடிக்கடி காட்டினான் இன்று அவனது மகளின் கேவலமான வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.
இதுக்கும் திமுக கொத்தடிமை நாய்கள் வெட்கமில்லாமல் முட்டு கொடுப்பானுக பாருங்க. pic.twitter.com/iWJAE1zgi8
— SURULIVEL K (@SURULIVEL1971) May 24, 2024
கலாநிதிமாறன் மகள் காவ்யாமாறன்
கர்மா என்பது யாதெனில் அன்னைக்கு நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் நடக்காத ஒன்றை சன் தொலைக்காட்சியில் அடிக்கடி காட்டினான் இன்று அவனது மகளின் கேவலமான வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.
இதுக்கும் திமுக கொத்தடிமை நாய்கள் வெட்கமில்லாமல் முட்டு கொடுப்பானுக பாருங்க. pic.twitter.com/GWYPU0y4Qx
— Senthil Senthilkumar (@rmsenthilkumar1) May 25, 2024