YouTurn

மியான்மர் நிலநடுக்கத்தின் போது கடலில் பேரலைகள் ஏற்பட்டதா? உண்மை என்ன?

மியான்மர் நிலநடுக்கத்தின் போது கடலில் பேரலைகள் ஏற்பட்டதா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்டதாகும்.

பரவிய செய்தி

நடுங்கவைக்கும் மியான்மர் நிலநடுக்க காட்சிகள் #myanmar #myanmarearthquake



Instagram Link

விரிவான விளக்கம்

கடந்த மார்ச் 28ஆம் தேதி மியான்மர் நாட்டில் 7.7 அளவில் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் சென்றுவிட்டது. இந்த நிலநடுக்கம் மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்தையையும் பாதித்தது. 

இந்நிலையில், கடலில் சூறாவளி போன்று பேரலைகள் எழுந்து, கடலோரத்தில் இருக்கும் கட்டிடங்களை ஒட்டி விழும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, இந்த வீடியோ மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் என்று பரப்பப்படுகிறது.


உண்மை என்ன?


மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது கடலில் பேரலைகள் எழுந்தது குறித்த செய்திகளை பொருத்தமான keywords கொண்டு இணையத்தில் தேடினோம். ஆனால், இது குறித்த செய்தி ஏதும் கிடைக்கவில்லை. வீடியோவில் இருப்பது போன்று ஒரு நகரத்தை அச்சுறுத்தும் அளவிற்கு பேரலைகள் உண்மையாகவே வந்திருந்தால் உலகம் செய்தியாக வெளியிடப்பட்டிருக்கும். 



ஆனால் இது குறித்த செய்திகள் கிடைக்காததால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கண்டறியும் தளத்திளமான ‘Hive Moderation’ல் சோதனை செய்த போது இது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவருகிறது.


மேலும்,  ‘Was it AI’ என்னும் வேறொரு சோதனைத் தளத்தில் ஆராய்ந்தபோது இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது நிரூபணமாகிறது.


முடிவு:


மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது கடலில் சூறாவளி போன்ற பேரலைகள் எழுந்ததாக காட்சிபடுத்தும் வீடியோ செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்டதாகும்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க