யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோ ஆகும்.
பரவிய செய்தி
”தமிழ்நாட்டில் உள்ள குன்னூரில் ஆம்புலன்ஸின் கதவு திறந்து, அதிலிருந்த நோயாளி படுக்கையுடன் சாலையில் விழுந்தார். இது தெரியாமல் ஓட்டுநர் ஆம்புலன்ஸை ஓட்டிச் செல்கிறார்”



விரிவான விளக்கம்
’ஆம்புலன்ஸ் ஒன்று சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அதன் பின்புறக் கதவு திறந்துகொள்கிறது. பின்னர், அந்தக் கதவின் வழியே நோயாளி ஒருவர் நகரும் படுக்கையுடன் ஆம்புலன்ஸில் இருந்து கீழே விழுந்துவிடுகிறார். அதைக் கவனிக்காமலே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கிறது’. இந்த வீடியோவை பதிவிட்டு, ஆம்புலன்ஸில் இருந்து நோயாளி கீழே விழுந்த இந்த சம்பவம் தமிழ்நாட்டின் குன்னூரில் நடந்ததாக இந்துத்துவ ஆதரவாளர் உட்பட பலரால் ’இந்தி மொழியில்’ சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
तमिलनाडु के कून्नूर में दिल दहला देने वाला वाकया,
एम्बुलेंस का दरवाज़ा खुला और मरीज़ स्ट्रेचर समेत सड़क पर गिर गया
लेकिन ड्राइवर को ज़रा भी खबर नहीं हुई, वो आगे बढ़ता रहा
ज़िंदगी बचाने वाली गाड़ी ही लापरवाही की मिसाल बन गई pic.twitter.com/FjAg34mu2T
तमिलनाडु के कून्नूर में दिल दहला देने वाला वाकया,
एम्बुलेंस का दरवाज़ा खुला और मरीज़ स्ट्रेचर समेत सड़क पर गिर गया
लेकिन ड्राइवर को ज़रा भी खबर नहीं हुई, वो आगे बढ़ता रहा
ज़िंदगी बचाने वाली गाड़ी ही लापरवाही की मिसाल बन गई pic.twitter.com/QfFaD3GVAM
तमिलनाडु के कून्नूर में दिल दहला देने वाला वाकया,
एम्बुलेंस का दरवाज़ा खुला और मरीज़ स्ट्रेचर समेत सड़क पर गिर गया
लेकिन ड्राइवर को ज़रा भी खबर नहीं हुई, वो आगे बढ़ता रहा
ज़िंदगी बचाने वाली गाड़ी ही लापरवाही की मिसाल बन गई। pic.twitter.com/nEgYpwixJx
உண்மை என்ன?
இந்த வீடியோவில் உள்ள ஆம்புலன்ஸ் இந்தியாவில் பொதுவாக செயல்படும் ஆம்புலன்ஸ் வடிவத்தில் இல்லை என்பதை பார்க்கிறோம். இதனால் பரப்பப்படும் இந்த வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடியபோது, ‘Nebulo Ivan Velez’ என்ற பெயரில் உள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது.
இந்த பக்கத்தில் காணப்படும் சுயகுறிப்பில் (Bio) செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பகடிகள் செய்யும் வகையில் வீடியோக்கள் உருவாக்குவதில் நாட்டமிருப்பதாக ஸ்பானிஷ் (spanish) மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்க்கும் போது செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதுபோன்று பல வீடியோக்கள் உருவாக்கி பதிவிடப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

மேலும் இந்த வீடியோவை, Hive Moderation என்ற தளத்தில் சோதனை செய்த போது, இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒன்றுதான் என்பது உறுதியாகிறது.
முடிவு:
செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோவை தமிழ்நாட்டின் குன்னூரில் நடந்த சம்பவம் என்று தவறாக பரப்பிவருகிறார்கள்.