YouTurn

பாகிஸ்தானில் பணத்தை எடுக்க வங்கியில் குவிந்த மக்கள் எனப் பரவும் ஆப்கானிஸ்தான் வீடியோ!

பாகிஸ்தானில் பணத்தை எடுக்க வங்கியில் குவிந்த மக்கள் எனப் பரவும் ஆப்கானிஸ்தான் வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சி நடத்த தொடங்கியதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வங்கிகளில் பணம் எடுக்க பொதுமக்கள் திரண்ட போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

இந்தியா போர் தொடுக்கும் என்கிற பீதியில் பாகிஸ்தானில்  மக்கள் தங்கள் பணத்தை எடுக்க வங்கியில் குவிந்தனர்..!!


X Link | Archive Link

விரிவான விளக்கம்

இந்தியா பாகிஸ்தான் போர் நான்கு நாட்கள் தொடர்ந்த நிலையில், பதற்றமான எல்லை தாண்டிய மோதல்களுக்குப் பிறகு முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்திற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த மே 10 அன்று ஒப்புக் கொண்டன. அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இரு நாடுகளுக்கும் இடையில் சமாதனத்தை ஏற்படுத்துவதில் பல்வேறு தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், இந்தியா போர் தொடுக்கும் என்கிற பீதியில் பாகிஸ்தானில் உள்ள மக்கள் தங்கள் பணத்தை எடுக்க வங்கியில் குவிந்துள்ளதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் மக்கள் பலரும் கூட்டம் கூட்டமாக வங்கியின் வாசலில் நிற்பதை காண முடிகிறது.


#IndiaPakistanWar#Pakistan pic.twitter.com/elVURePgMB

— Abhi ™ (@Patelizm) May 5, 2025



உண்மை என்ன?


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது. 


TRT World” யூடியூப் பக்கத்தில் பரவி வரும் இதே வீடியோ கடந்த 2021 ஆகஸ்ட் 31 அன்று “ஆப்கானிஸ்தானியர்கள் காபூல் வங்கிகளில் பணம் எடுக்கும் காட்சி” என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.



இது குறித்து மேலும் தேடியதில், பரவி வரும் வரும் வீடியோவில் உள்ள காட்சிகளைக் குறிப்பிட்டு “Daily Mail“ ஊடகப் பக்கத்தில் கடந்த 2021-ல் செய்தி வெளியிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. 


அதில், “ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் புதிய சகாப்தத்தையடுத்து, வங்கிகளுக்கு வெளியே மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதையும், காபூலின் சந்தைகளில் விலைவாசி உயர்வு ஏற்பட்டிருப்பதையும் காண முடிகிறது“ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 



இதன் மூலம் கடந்த 2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சி நடத்த தொடங்கியதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வங்கிகளில் பணம் எடுக்க பொதுமக்கள் திரண்ட போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது. 


முடிவு:


நம் தேடலில், பரவி வரும் வீடியோ பாகிஸ்தானில் எடுக்கப்பட்டதல்ல என்பதையும், ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது என்பதையும் அறிய முடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க