யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற திமுக வேட்பாளர் தொகுதி ஆண் வாக்காளர்களுக்காக மதுவிருந்து சப்ளை செய்வதற்காக சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில், வாட்டர் பாட்டில், ஸ்னாக்ஸ் போன்றவையே கொடுப்பதற்காக தயாராக வழுதூர் உள்ள ஒரு கிட்டங்ககியில் இருந்தது. அதை பறிமுதல் செய்தனர் தேர்தல் அதிகாரிகள் !
Facebook link | Archive link திருமங்கலத்தில் போட்டியிடும் அமைச்சர் உதயகுமார் என்பவர் தொகுதி ஆண் வாக்காளர்களுக்காக மதுவிருந்து சப்ளை செய்வதற்காக சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில், வாட்டர் பாட்டில் ஸ்னாக்ஸ் போன்றவையே கொடுப்பதற்காக தயாராக கப்பலூரில் உள்ள ஒரு கிட்டங்கில் இருந்தது. அதை பறிமுதல் செய்தனர் தேர்தல் அதிகாரிகள் !

Facebook link | Archive link
விரிவான விளக்கம்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கையில் கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதற்கு எதிராக தேர்தல் ஆணையம் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் கிடங்குகளில் வைக்கப்பட்டு இருக்கும் பரிசுப் பொருட்களை கைப்பற்றியும் வருகிறார்கள்.
இந்நிலையில், " ஆண் வாக்காளர்களுக்காக மதுவிருந்து சப்ளை செய்வதற்காக சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில், வாட்டர் பாட்டில், ஸ்னாக்ஸ் போன்றவை கொடுப்பதற்காக தயாராக ஒரு கிடங்கியில் இருந்தது. அதை பறிமுதல் செய்தனர் தேர்தல் அதிகாரிகள் " எனும் ஒரே தகவல் மற்றும் ஒரே புகைப்படத்துடன் இராமநாதபுரம் திமுக வேட்பாளர் மற்றும் அதிமுக அமைச்சர் உதயகுமார் பெயரை மாற்றி மாற்றி சமூக வலைதளங்களில் பரப்பி வருவதை காண நேரிட்டது.
உண்மை என்ன ?
அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு மது பாட்டில்களை விநியோகம் செய்ய கிடங்கில் வைத்திருந்ததை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து இருந்தால் ஊடகங்கள் அனைத்திலும் விரைவு செய்தியாக வெளியாகி இருக்கும். ஆனால், இதுதொடர்பாக எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
Archive link
வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " 2020ம் ஆண்டு பீகார் தேர்தலின் போது பாஜக-நிதிஷ் குமார் கூட்டணி சார்பில் விநியோகிப்பதற்காக வைக்கப்பட்ட மது பாட்டில்கள் என ட்விட்டர் உள்ளிட்டவையில் வைரலாக்கி உள்ளனர். ஆனால், இந்த புகைப்படம் இந்தியாவைச் சேர்ந்தது இல்லை.

2019ம் ஆண்டு செப்டம்பரில் soccersuck.com எனும் இணையதளத்தில் அடிக்கி வைக்கப்பட்ட மதுபாட்டில்களின் பைகளின் புகைப்படம் மற்றும் அதை படகில் ஒருவர் வழங்குவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
theenews03.blogspot.com எனும் தளத்தில் தாய்லாந்து மொழியில் வெளியானதை மொழிமாற்றம் செய்து பார்க்கையில், " தாய்லாந்து நாட்டின் உபோன் ராட்சதனி பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது குடிமகன்களின் நிலை புரிந்து ஒருவர் மது விநியோகம் செய்ததாகக் " கூறப்பட்டுள்ளது.

முடிவு :
நம் தேடலில், அதிமுக, திமுக வேட்பாளர்கள் 30 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய வைத்ததை தேர்தல் பறக்கும் படை பிடித்ததாக பரப்பப்படும் புகைப்படம் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தது என்றும், அவ்வாறான சம்பவம் ஏதும் நிகழவில்லை என்பதையும் அறிய முடிகிறது.

बिहार में बीजेपी-जदयू की कुछ तैयारी ऐसी भी चल रही है....
ध्यान रहे बिहार वासियों ये जहर ओर कहर दोनो है इसलिए बहकावे में नहीं आना है....!!@RJDforIndia @laluprasadrjd pic.twitter.com/Qync2avJ1f
— Pushpraj Singh🤝 (@pushprajyadav97) October 19, 2020