யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
Democracy Network & உங்கள் குரல் அமைப்புகள் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள். அதிமுக 122, திமுக 111 இடங்கள் கைப்பற்றும்.

Twitter link | Archive link

Twitter link | Archive link
விரிவான விளக்கம்
டெமாக்ரசி நெட்வொர்க் மற்றும் உங்கள் குரல் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய தமிழக தேர்தல் கருத்துக் கணிப்பில், அதிமுக கூட்டணி 122 இடங்களிலும், திமுக கூட்டணி 111 இடங்களிலும், அமமுக 1 இடத்திலும் வெற்றி பெறும் என அறிவிக்கப்பட்டதாக தினமணி, ஒன்இந்தியா,ஏசியாநெட் உள்ளிட்ட செய்திகளில் வெளியாகியது.

News archive link
சமூக வலைதளங்களில், அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி ஆதரவாளர்கள் பலரும் இந்த கருத்துக் கணிப்பை பகிர்ந்து வந்தனர். அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் இக்கருத்துக் கணிப்பின் முடிவுகள் குறித்து பதிவிட்டு உள்ளனர்.

கருத்துக் கணிப்பு குறித்து எகனாமிக் டைம்ஸ் செய்தியில் வெளியான கட்டுரையால் பலரும் உண்மை என நினைத்து உள்ளனர். swarajyamag போன்ற வலதுசாரி ஆதரவு ஆங்கில இணையதளமும் எகனாமிக் டைம்ஸ் செய்தியை குறிப்பிட்டு இக்கருத்துக் கணிப்பு பற்றி கட்டுரை, வீடியோ வெளியிட்டு இருக்கிறது.
Twitter link | Archive link
ஆனால், வைரலாகிக் கொண்டிருக்கும் கருத்துக் கணிப்பை டெமாக்ரசி டைம்ஸ் நெட்வொர்க் எனும் அமைப்பு மறுத்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. உங்கள் குரல் போன்ற எந்த அமைப்புகள் உடன் இணைந்து செயல்படவில்லை, நாங்கள் வெளியிடும் கருத்துக் கணிப்பில் எங்கள் லோகோ உடன் அதிகாரப்பூர்வமான பக்கத்தில் மட்டுமே வெளியிடப்படும். தமிழ்நாட்டின் கருத்துக் கணிப்பை 25-ம் தேதி வெளியிடுவதாக தெரிவித்து உள்ளனர்.
வைரல் செய்யப்படும் கருத்துக் கணிப்பில் டெமாக்ரசி நெட்வொர்க் மற்றும் உங்கள் குரல் என இரு லோகோ உள்ளது. அது டெமாக்ரசி டைம்ஸ் நெட்வொர்க் லோகோ போன்றும் இல்லை. வைரலாகும் கருத்துக் கணிப்பை டெமாக்ரசி டைம்ஸ் நெட்வொர்க் மறுத்துள்ளது. மேலும், டெமாக்ரசி நெட்வொர்க் மற்றும் உங்கள் குரல் என்ற பெயரில் கருத்துக் கணிப்பு நிகழ்ந்ததாகவோ அல்லது அவற்றின் அதிகாரப்பூர்வ தகவலோ ஏதும் கிடைக்கவில்லை. ஏன், அப்படியொரு பக்கமோ, லோகோவோ கூட கிடைக்கவில்லை.
இதையடுத்து, தினமணி நாளிதழ் தரப்பில் பெயர் குறிப்பிட விரும்பாத பணியாளரிடம் யூடர்ன் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டு பேசிய போது, கருத்துக் கணிப்பு குறித்த ஆதாரம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பி இருந்தோம். அதுகுறித்து நிறுவனத்தில் கேட்பதாகவும், பிறகு அழைக்குமாறு கூறி இருந்தார்.

இந்நிலையில், தினமணி இணையதளத்தில் வெளியாகி இருந்த அந்த கருத்துக் கணிப்பு செய்தியே நீக்கப்பட்டு உள்ளது.
முடிவு :
நம் தேடலில், டெமாக்ரசி நெட்வொர்க் மற்றும் உங்கள் குரல் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு என செய்திகள், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல் போலியானது என அறிய முடிகிறது.

Statement on opinion poll for Tamil Nadu Assembly Elections 2021.#TNAssemblyElections2021 #TamilNaduElections #TNElections2021 #TNAssemblyElection2021 pic.twitter.com/tjqJdE5RGP
— Democracy Times Network (@TimesDemocracy) March 22, 2021