YouTurn

இரயில் எஞ்சினில் அதானி நிறுவனத்தின் விளம்பரம்.. அதானி இரயில் வந்ததாக தவறான தகவல்!

இரயில் எஞ்சினில் அதானி நிறுவனத்தின் விளம்பரம்.. அதானி இரயில் வந்ததாக தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

ஐயா எங்க ஊருக்கு அதானி ரயில் வந்துருச்சு இனி சொகுசாக ஊரை சுத்தும்.. ஏழைகள் எல்லாம் பசியால் சுடுகாடு போகும்.


விரிவான விளக்கம்

இந்திய இரயில்வேவிற்கு சொந்தமான இரயில்கள் அதானிக்கு விற்கப்பட்டு உள்ளதாக எஞ்சின் முழுவதும் அதானி குழுமத்தின் விளம்பரங்கள் இடம்பெற்று இருப்பதை சுற்றி எடுக்கப்பட்ட 1 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் இந்திய அளவில் பகிரப்பட்டு வருகிறது.



உண்மை என்ன ? 

வைரலாகும் வீடியோவில் இருக்கும் இரயில் எஞ்சினில் WAP 7 என எண் குறிப்பிடப்பட்டு உள்ளதை காண முடிந்தது. அதை வைத்து தேடிப் பார்க்கையில், அது குஜராத் மாநிலத்தின் வதோதரா பகுதியைச் சேர்ந்தது என்று அறிய முடிந்தது. மேலும், இரயிலை அதானிக்கு விற்கவில்லை, அந்நிறுவனத்தின் விளம்பரங்கள் மட்டுமே இடம்பெற்று உள்ளன.



2020 மார்ச் 4-ம் தேதி வெளியான financialexpress செய்தியில், " லோகோமோட்டிவ் பிராண்டிங்கில் இருந்து இந்திய ரயில்வே பெரிய வருவாய் ஈட்டுகிறது. 2020 பிப்ரவரி 27-ம் தேதி மொத்தம் 5 WAP 7 எஞ்சின்கள் அதானி வில்மருக்கு ரோட்டா சார்பு அடிப்படையில் ஒதுக்கப்பட்டன. மேற்கு ரயில்வேவின் குஜராத் பிரிவில் வரும் வதோதராவில் லோகோமோட்டிவ் பிராண்டிங் மூலம் வருடத்திற்கு 73.26 லட்சம் வருவாய் ஈட்டுகிறது " என வெளியாகி இருக்கிறது.



இதுகுறித்த பத்திரிகை வெளியீட்டை அதானி வில்மர் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. அதானி குழுமம் மற்றும் சிங்கப்பூர் வில்மர் இன்டர்நேஷனல் லிமிடெட் ஆகியவை இணைந்ததே அதானி வில்மர் நிறுவனமாகும். உண்ணக்கூடிய எண்ணெய்கள் மற்றும் உணவு தானியங்கள் ஆகியவை அவற்றின் முதன்மையான தயாரிப்புகள்.



Archive link

PIB உடைய அதிகாரப்பூர்வ டட்விட்டர் பக்கத்திலும், அதானிக்கு இரயில்கள் விற்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளதாக வணிக ரீதியான விளம்பரம் மட்டுமே என வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், இந்திய ரயில்வேக்கு சொந்தமான இரயில்களை அதானிக்கு விற்கப்பட்டு உள்ளதாக வைரலாகும் வீடியோ தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. இரயில் எஞ்சின்களில் வணிக ரீதியான விளம்பரங்களை இடம்பெறச் செய்து இரயில்வேதுறை வருவாய் ஈட்டி வருகிறது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க