YouTurn

5 ரூபாய்க்கு மருத்துவம் பார்ப்பவர் என வைரலாகும் நடிகையின் புகைப்படம் !

5 ரூபாய்க்கு மருத்துவம் பார்ப்பவர் என வைரலாகும் நடிகையின் புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

Jenifer chennai எனும் முகநூல் பக்கத்தில், " 100 கோடி வாங்கி கொண்டு 5 ரூபாய் டாக்டர் வேடத்தில் நடித்த நடிகர் விஜய் உண்மையான ஹீரோவா அல்லது நிஜ வாழ்க்கையில் 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் பவித்ரா உண்மையான ஹீரோவா ? " என பெண் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. சமகாலத்திலும் ரூ 5...

பரவிய செய்தி

100 கோடி சம்பளம் வாங்கிவிட்டு 5 ரூபாய் டாக்டர் வேடத்தில் நடித்த விஜய் உண்மையான ஹீரோவா? நிஜ வாழ்க்கையில் டாக்டருக்கு படித்து உண்மையிலேயே 5 ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கும் இந்தப் (பவித்ரா) உண்மையான ஹீரோவா? 



Facebook link | archive link

விரிவான விளக்கம்

Jenifer chennai எனும் முகநூல் பக்கத்தில், " 100 கோடி வாங்கி கொண்டு 5 ரூபாய் டாக்டர் வேடத்தில் நடித்த நடிகர் விஜய் உண்மையான ஹீரோவா அல்லது நிஜ வாழ்க்கையில் 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் பவித்ரா உண்மையான ஹீரோவா ? " என பெண் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.



சமகாலத்திலும் ரூ 5, 10, 20-க்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் பலர் இருந்தனர், இருக்கின்றனர். அது குறித்தோ அல்லது நடிகர் விஜய் திரைப்படங்களில் நடிப்பது குறித்தோ பேசப் போவதில்லை. வைரல் செய்யப்படும் பெண் குறித்த தகவல் உண்மையா என்பதை மட்டுமே பார்ப்போம்.

உண்மையில், புகைப்படத்தில் காட்டப்பட்டு இருக்கும் பெண் மருத்துவர் அல்ல, அவர் நடிகை. அப்புகைப்படத்தினை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், அவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை நீரஜா என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.



2013 முதல் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கிய நீரஜாவிற்கு முதல் தமிழ் படம் ஆரண்யம். 2018-ல் பூஜையுடன் தொடங்கப்பட்ட " சிதம்பரம் ரயில்வே கேட் " எனும் திரைப்படத்தில் அவர் நடித்து உள்ளார். அந்த திரைப்படத்திற்கு எடுக்கப்பட்ட புகைப்படமே இது.



Facebook link | archive link 

2019-ல் நீரஜாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் " சிதம்பரம் ரயில்வே கேட் " திரைப்பட பெயரைக் குறிப்பிட்டு இப்புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அப்புகைப்படத்தையே தற்போது 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர் பவித்ரா என தவறாக வைரல் செய்து வருகிறார்கள்.



நடிகரை கிண்டல் செய்ய நடிகையின் புகைப்படத்தை பயன்படுத்தி உள்ளார்கள். இதை உண்மை என நினைத்து பலரும் கமெண்ட்களில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…