YouTurn

நடிகை பவானி மற்றும் அமீர் வேறு மதத்தவர்கள்.. இவர்களது திருமணம் செல்லுபடியாகாது.. வதந்தி பரப்பும் பயில்வான் ரங்கநாதன்!

 நடிகை பவானி மற்றும் அமீர் வேறு மதத்தவர்கள்.. இவர்களது திருமணம் செல்லுபடியாகாது.. வதந்தி பரப்பும் பயில்வான் ரங்கநாதன்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சமீபத்தில் நடிகை பவானி ரெட்டி மற்றும் அமீரின் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து அமீரும் பவானியும் வேறு வேறு மதத்தவர்கள். அமீர் இஸ்லாமியர். பவானி கிறிஸ்தவர். எனவே இவர்களது திருமணம் செல்லுபடியாகாது என்று யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பரவிய செய்தி

அமீர் பவானி திருமணத்தில் முக்கியமான பிரச்சனை என்னவென்றால், அமீரும் பவானியும் வேறு வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள். அமீர் இஸ்லாமியர். பவானி கிறிஸ்தவர். இரண்டு பேரும் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால் நான் கிறிஸ்தவ முறைப்படி வாழ்வேன் என்று பவானியும், நான் இஸ்லாமியராக வாழ்க்கையே பயணிப்பேன் என்று அமீரும் சொல்லியிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் இந்தத் திருமணம் செல்லுபடியாகுமா என்றால்? செல்லுபடியாகாது. ஏனென்றால் சர்ச்சிலும் பதிவு செய்யமாட்டார்கள். மசூதியிலும் பதிவு செய்யமாட்டார்கள். தமிழ்நாட்டில் திருமணத்தை பதிவு செய்யும் அலுவலகத்திலும் இதை பதிவு செய்யமாட்டார்கள். இது சிக்கலான திருமணம். இது செல்லாது.


Facebook Link:

விரிவான விளக்கம்

சமீபத்தில் நடிகை பவானி ரெட்டி மற்றும் அமீரின் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து அமீரும் பவானியும் வேறு வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். அமீர் இஸ்லாமியர். பவானி கிறிஸ்தவர். எனவே இவர்களது இந்தத் திருமணம் செல்லுபடியாகாது என்று யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ள இந்த வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. 



உண்மை என்ன?


பரவி வரும் வீடியோவில் குறிப்பிட்டுள்ளவாறு இருவேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டால், அவர்களின் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகாதா என்பது குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ள கருத்துகள் தவறானவை என்பதை உறுதிசெய்ய முடிந்தது. 


‘சிறப்பு திருமணச் சட்டம் 1954’ என்ன கூறுகிறது? 


இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் பௌத்தர்கள் உட்பட அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களுக்கும் பொருந்தும் வகையில் சிறப்பு திருமணச் சட்டம் 1954 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின் படி வெவ்வேறு மதத்தினர், ஜாதியினர்களுக்கு இடையே நடைபெறும் கலப்புத் திருமணங்களுக்கு சட்டத்தின் படி அங்கீகாரம் வழங்கப்படுகிறது. 


மேலும் இச்சட்டத்தின் பிரிவு 4-ல் “எந்த இரண்டு நபர்கள் வேண்டுமானாலும் பின்வரும் விதிகளுக்குட்பட்டு திருமணம் செய்து கொள்ளலாம்” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதையும் காண முடிகிறது. 


விதிமுறைகள்: 


  • ஆண் 21 வயதையும் பெண் 18 வயதையும் அடைந்திருக்க வேண்டும். 
  • இருவருக்கும் எந்தவித மனநல பாதிப்புகளும் இருக்கக் கூடாது
  • தடைசெய்யப்பட உறவுகளுக்குள் இல்லாமல் இருக்க வேண்டும். 
  • திருமணம் நடைபெறும் இருவருக்கும் வேறு வாழ்க்கைத்துணைகள் இருக்கக்கூடாது. வேறு வாழ்க்கைத்துணை இருப்பின் விவாகரத்து பெற்றிருக்க வேண்டும். 
  • மணமக்கள் இருவரும் மனதார சம்மதம் தெரிவித்திருக்க வேண்டும். 
  • திருமணம் செய்வதற்கு ஒரு மாதத்திற்கு (30 நாட்கள்) முன்பு “Notice of intended marriage” என்பதை வழங்க வேண்டும்.
  • அந்த 30 நாட்களுக்குள் திருமண தகுதிகள் சார்ந்து ஏதேனும் எதிர்ப்புகள் எழுந்தால்,  30 நாட்களுக்குள் அதனை விசாரணை நடத்தி திருமண அலுவலர் முடிவு கொடுக்க வேண்டும்
  • எதிர்ப்புகள் எழாத பட்சத்தில், 30 நாட்களுக்கு பிறகு மணமக்கள் இருவர் மற்றும் 3 சாட்சிகள் நேரில் சென்று Declaration form-ல் கையொப்பம் இட வேண்டும்.

இதன் மூலம் முஸ்லிம் திருமணச் சட்டம் , இந்து திருமணச் சட்டம் போன்ற மத அடிப்படையிலான சட்டங்களில் , திருமணத்திற்கு முன் வாழ்க்கைத் துணைவர்களில் ஒருவர் மற்றவரின் மதத்திற்கு மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்ற சூழலில், சிறப்பு திருமணச் சட்டம் மூலம் இருவேறு மதத்தினர் மதம் மாறாமலேயே திருமணம் செய்து கொள்ள முடியும் என்பதை அறிய முடிகிறது. 


எனவே அமீரும் பவானியும் வேறு வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். அமீர் இஸ்லாமியர். பவானி கிறிஸ்தவர். எனவே இருவேறு மதத்தைச் சேர்ந்த இவர்களது இந்தத் திருமணம் செல்லுபடியாகாது, இவர்களது திருமணத்தை சார்பதிவாளார் அலுவலகத்தில் பதிவு செய்யமாட்டார்கள் என்று யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ள கருத்துகள் முற்றிலும் தவறானவை


இவர்களது திருமணம் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்யப்படும் பட்சத்தில், கட்டாயம் இவர்களது திருமணம் சட்டத்தின்படி செல்லுபடியாகும். 


முடிவு: 


நம் தேடலில், நடிகை பவானி மற்றும் அமீர் இருவரும் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் எனவே இவர்களது திருமணத்தை பதிவு செய்ய முடியாது,  சட்டத்தின் படியும் இவர்களது திருமணம் செல்லுபடியாகாது என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ள கருத்துகள் முற்றிலும் தவறானவை என்பதை உறுதிசெய்ய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க