YouTurn

கம்யூனிஸ்ட் இந்து பெண்ணை முஸ்லீம் காதலன் தாக்கியதாக தவறாகப் பரப்பப்படும் கேரளா நடிகையின் புகைப்படங்கள் !

கம்யூனிஸ்ட் இந்து பெண்ணை முஸ்லீம் காதலன் தாக்கியதாக தவறாகப் பரப்பப்படும் கேரளா நடிகையின் புகைப்படங்கள்  !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

அங்கிதா விஜய் என்னும் கம்யூனிஸ்ட் இந்து பெண் அப்துல் என்பவரைக் காதலித்து சொர்க்கம் செல்ல விரும்பினால். ஆனால், அவள் உயிருடன் இருக்கும் போதே நரகத்தைக் காட்டிவிட்டான் அப்துல். இது ஒரு இந்து முஸ்லிம் காதல். என்ன நடக்கிறது என்பதிலிருந்து ஏன் மக்கள் பாடம் கற்பதில்லை. அப்துல் என்பவன் அப்துல் மட்டுமே. எந்த வித்தியாசமும் இல்லை.Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

ம்யூனிஸ்ட் ஆக மாறிய இந்து பெண்ணான அங்கிதா விஜய் என்பவர் அப்துல் என்ற இஸ்லாமியரைக் காதலித்து வந்ததாகவும், அந்நபர் அங்கிதாவை மிகக் கொடூரமாகத் தாக்கியதாகக் காயங்களுடன் இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

https://twitter.com/RSS_Activist/status/1648956601888575488

Archive link 

உண்மை என்ன ? 

பரப்பப்படும் புகைப்படங்களைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், அப்பெண் முஸ்லீம் காதலரால் தாக்கப்பட்டார் எனப் பரவும் தகவல் உண்மை அல்ல என்பதை அறிய முடிந்தது.

2023ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி 'நியூஸ் 18' இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தி ஒன்றில் பரவக் கூடிய புகைப்படங்கள் உள்ளன. அச்செய்தியில், மலையாள நடிகை அனிக்கா விக்ரமன் தனது முன்னாள் காதலன் அனூப் பிள்ளையால் உடல் ரீதியாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் அதில் காயங்களுடன் நடிகை தனது சமூக ஊடகத்தில் பதிவிட்ட புகைப்படத்தின் ஸ்கிரீன் ஷாட்டும் பதிவிடப்பட்டுள்ளது. 



Archive link

இதேபோல், 'இந்தியா டுடே' யூடியூப் பக்கத்திலும் ‘முன்னாள் காதலன் சித்திரவதை செய்ததாக மலையாள நடிகை அனிக்கா விக்ரமன் புகார்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அவ்வீடியோவிலும் முன்னாள் காதலனால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அனிக்கா சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறியதுடன், பரவக் கூடிய புகைப்படங்களும் காண்பிக்கப்படுகிறது.



இச்சம்பவம் குறித்து 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' பத்திரிகையில் வெளியான செய்தியிலும், கடந்த சில வருடங்களாக உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் முன்னாள் காதலர் அனூப் பிள்ளையால் துன்புறுத்தப்பட்டதாக அனிக்கா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள தனது முன்னாள் காதலன் நியூயார்க்கில் இருப்பதாகத் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : ஓம் என்ற வார்த்தையைக் கேரளாவில் தடை செய்ய இஸ்லாமியர்கள் வலியுறுத்தியதாக வதந்தி !

இஸ்லாமியர்கள் குறித்து பரப்பப்பட்ட பல போலி செய்திகளின் உண்மைத் தன்மையினை யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.

மேலும் படிக்க : இந்து பெண்ணிற்குப் போதை மருந்துக் கொடுத்த இஸ்லாமிய மதகுரு எனப் பரப்பப்படும் பொய்யான வீடியோ

முடிவு :

நம் தேடலில், பரவக் கூடிய புகைப்படத்தில் இருக்கும் அனிக்கா விக்ரமன் என்னும் மலையாள நடிகையை அவரது முன்னாள் காதலர் அனூப் பிள்ளை என்பவர் தாக்கியுள்ளார். அவர் இஸ்லாமியர் இல்லை என்பதை அறிய முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க