YouTurn

நடிகர் விவேக் என்னை தலைவர் என்றே அழைப்பார் என சீமான் கூறியதாக போலி செய்தி !

நடிகர் விவேக் என்னை தலைவர் என்றே அழைப்பார் என சீமான் கூறியதாக போலி செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

நடிகர் விவேக் என்னை தலைவர் என்றே அழைப்பார் - சீமான்



Archive link 

விரிவான விளக்கம்

நடிகர் விவேக் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் உடலுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் இறுதி மரியாதை செலுத்தினர்.

அப்படி மரியாதை செலுத்த சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "  நடிகர் விவேக் என்னை தலைவர் என்றே அழைப்பர் " எனக் கூறியதாக சன் நியூஸ் செய்தியின் நியூஸ் வீடியோ டெம்பிளேட் ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.



சன் நியூஸ் செய்தியில், " என்னுடைய இதயத்துக்கு மிகவும் நெருக்கமானவர் நடிகர் விவேக் - இரங்கல் தெரிவிக்கும் சீமான் " தலைப்பில் சீமான்  இரங்கல் தெரிவிக்கும் 2.42 நிமிட வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில், நடிகர் விவேக் என்னை தலைவர் என்றே அழைப்பர் என சீமான் கூறவில்லை.



" நடிகர் விவேக்கின் உடலுக்கு சீமான் நேரில் அஞ்சலி " என வெளியான இடத்தில் ஃபோட்டோஷாப் செய்து தவறான செய்தியைப் பரப்பி வருகிறார்கள்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க