YouTurn

நடிகர் விவேக் தாயார் எப்போது இறந்தார் ?| வைரலாகும் கடந்த வருடப் பதிவுகள்.

நடிகர் விவேக் தாயார் எப்போது இறந்தார் ?| வைரலாகும் கடந்த வருடப் பதிவுகள்.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

நடிகர் விவேக் அவர்களின். தாயார் S.மணியம்மாள் (86), சற்றுமுன் இயற்கை எய்தினார். நல்ல மனிதனை, பெற்ற தாய்க்கு இரங்கல்கள். இறைவா. எந்த தாயும் மரணிக்கக்கூடாது.


விரிவான விளக்கம்

நகைச்சுவை நடிகர் விவேக் உடைய தாயார் இயற்கை எய்தினார் என ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், நடிகர் விவேக் உடைய தாயார் இறந்தது கடந்த ஆண்டு ஜூலை மாதம்.





கடந்த சில மாதங்களாவே அவரின் புகைப்படங்களை பகிர்ந்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், கடந்த ஆண்டு அவர் இறந்த போது பதிவிட்ட புகைப்படத்துடன் கூடிய பதிவை இப்பொழுதும் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.



2019 ஜூலை 17-ம் தேதி விவேக் தாயார் மணியம்மாள் (86) சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்தார். சொந்த ஊரான சங்கரன்கோவிலை அடுத்த பெருங்கோட்டூரில் அவரின் உடல் நல்லடக்கம் செய்ய உள்ளதாக செய்திகளில் வெளியாகி இருந்தது.


கடந்த ஆண்டு இறந்தவருக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்துவதற்கு பதிலாக கடந்த ஆண்டு பதிவையே புதிது போல பகிர்ந்து உள்ளார்கள். தவறான தகவல்களை பகிர வேண்டாம்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க