YouTurn

சூர்யாவின் பெயர் சுரையா ஜமால் ஷேக் என கூகுளில் வருவதாக வதந்தி !

சூர்யாவின் பெயர் சுரையா ஜமால் ஷேக் என கூகுளில் வருவதாக வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

முஸ்லிமாக மதம் மாறி இந்துக்களை இழிவுபடுத்தும் சிவகுமார் குடும்பம். Googleல் surya real name என்று தேடிப் பாருங்கள்.



Facebook link | archive link 

விரிவான விளக்கம்

நடிகர் சூர்யா மாணவர்களின் கல்விக் குறித்தும், சுற்றுச்சூழல் குறித்தும் கருத்து தெரிவித்ததால் அவருக்கு எதிரான விமர்சனங்களும், வன்மம் நிறைந்த கருத்துக்களும் பரப்பப்பட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சூர்யா முஸ்லீம் மதத்திற்கு மாறிவிட்டார் எனக் கூறி பழைய வீடியோ ஒன்றையும் பரப்பினர். ஆனால், அந்த வீடியோ 2013-ல் ஆந்திராவில் சிங்கம் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெறும் போது சூர்யா மசூதிக்கு சென்றதை மதம் மாறியதாக வதந்தி பரப்ப பயன்படுத்திக் கொண்டனர்.

மேலும் படிக்க : நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா ? உருவாக்கப்படும் வதந்தி.



தற்போது மீண்டும் சூர்யாவின் பெயரை வைத்து வதந்தி பரப்பத் துவங்கி உள்ளன. கூகுளில் நடிகர் சூர்யாவின் உண்மையான பெயர் என்னவென்று தேடினால் சுரையா ஜமால் ஷேக் என வருவதாகவும், சூர்யாவின் உண்மையான பெயரை கூகுள் காட்டிக்கொடுத்ததாக நகைச்சுவையான வதந்தியைப் பரப்பி வருகிறார்கள்.



கூகுளில் " surya original name " மற்றும் " surya real name " என எப்படி தேடினாலும் " சரவணன் சிவக்குமார் " என்றே பதில் வருகிறது. பரப்பப்படும் ஸ்க்ரீன்ஷார்ட்டில் உள்ள புகைப்படமே காண்பிக்கப்படுகிறது. உண்மையான பதிவில் " suraiya jamaal sheikh " என எடிட் செய்து இருப்பார்கள் எனத் தோன்றுகிறது.

" suraiya jamaal sheikh " என பெயரை கூகுளில் தேடும் போது, அது பாலிவுட் திரைப்படத்தின் நடிகை மற்றும் பின்னணி பாடகி ஒருவரின் பெயர் என அறிந்து கொள்ள முடிந்தது.



மேலும் படிக்க : அகரம் அறக்கட்டளையின் வரவு செலவு 2 லட்சம் கோடியா ?| கிண்டலுக்கு உள்ளாகும் வதந்தி !

நடிகர் சூர்யாவை வைத்து தொடர்ந்து வதந்திகளை பரப்பும் வேலையை செய்து வருகிறார்கள். இதற்கு முன்பாக, அகரம் அறக்கட்டளை 2 லட்சம் கோடிக்கு வரவு, செலவு கணக்கை காண்பித்ததாக நகைச்சுவையான வதந்தியை பரப்பி கிண்டலுக்கு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க