YouTurn

ஒளிவரைவு சட்டத்தை நிறுத்தாவிட்டால் சினிமாவில் இருந்து விலகுவேன் என சூர்யா கூறினாரா ?

ஒளிவரைவு சட்டத்தை நிறுத்தாவிட்டால் சினிமாவில் இருந்து விலகுவேன் என சூர்யா கூறினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மத்திய அரசு ஒளிவரைவு சட்டத்தை நிறுத்தாவிட்டால் சினிமாவில் இருந்தே முற்றிலும் விலகுவேன் - நடிகர் சூர்யா



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வரும் ஒளிவரைவு சட்டத்தை நிறுத்தாவிட்டால் சினிமாவில் இருந்தே முற்றிலும் விலகுவேன் என நடிகர் சூர்யா கூறியதாக தினமலர் நியூஸ் கார்டு ஒன்றை தமிழ்நாடு பாஜகவின் காயத்ரி ரகுராம் மற்றும் பாஜக ஆதரவாளர்கள் பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.





உண்மை என்ன ?

மாணவர்களின் கல்வி தொடங்கி சமூக சார்ந்த பல கருத்துக்களை நடிகர் சூர்யா தெரிவித்து வருவதால் ஆளும் தரப்பினரால் அரசியல்ரீதியான விமர்சனங்களுக்கும், பலமுறை பொய் செய்திகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், நடிகர் சூர்யா ஜூலை 2-ம் தேதி தன் ட்விட்டர் பக்கத்தில், " சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல " எனும் கருத்துடன் ஒளிவரைவு சட்டத் திருத்தம் மீதான கருத்துகளுக்கு இறுதிநாள் குறித்து எடுத்துரைத்து இருந்தார்.



Twitter link 

நடிகர் சூர்யாவின் இக்கருத்து செய்தி நிறுவனங்கள் வரை கவனம் பெற்று வெளியாகி இருக்கின்றன. ஆனால், மத்திய அரசு ஒளிவரைவு சட்டத்தை நிறுத்தாவிட்டால் சினிமாவில் இருந்தே முற்றிலும் விலகுவேன் என நடிகர் சூர்யா எங்கும் குறிப்பிடவில்லை.



Archive link  

அப்படி கூறியதாக வைரல் செய்யப்படும் தினமலர் நியூஸ் கார்டு குறித்து தேடுகையில், வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்ட போலியான ஒன்று என அறிய முடிந்தது.



ஒளிவரைவு சட்டத் திருத்தம் எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசனும் தன்னுடைய கருத்தினை பதிவு செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவர் கருத்து கூறினால் அதனை கருத்துரீதியாக எதிர்கொள்ளாமல் எடிட் செய்த போலி செய்திகள் மூலமோ அல்லது அவருக்கு எதிரான போலி செய்தியை உருவாக்கியோ விமர்சனம் செய்வது தற்போதைய அரசியல் களத்தில் அதிகமாகவே இருக்கிறது.

முடிவு :

நம் தேடலில், மத்திய அரசு ஒளிவரைவு சட்டத்தை நிறுத்தாவிட்டால் சினிமாவில் இருந்தே முற்றிலும் விலகுவேன் என நடிகர் சூர்யா கூறியதாக பரவும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்ட போலியான செய்தி என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க