YouTurn

கொரோனாவால் "லொள்ளு சபா" மாறன் இறந்ததாக பரவும் தவறான செய்தி !

கொரோனாவால் "லொள்ளு சபா" மாறன் இறந்ததாக பரவும் தவறான செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கொரோனாவால் நடிகர் மாறன் உயிரிழப்பு.. கில்லி, தலைநகரம், ஏ1 போன்ற திரைப்படங்களில் நடித்த மாறன் கொரோனா பாதிப்பு காரணமாக செங்கல்பட்டு மருத்துவமனையில் உயிரிழப்பு

விரிவான விளக்கம்

கொரோனா பாதிப்பால் திரைப்பட துணை நடிகர் மாறன் இறந்ததாக செய்திகளில் வெளியாகி வருகிறது. அவரின் இறப்பிற்கு சமூக வலைதளங்களில் ஆழ்ந்த இரங்கல் பதிவுகளில் பதிவிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஏ1 திரைப்படத்தில் நடித்த நகைச்சுவை நடிகர் " லொள்ளு சபா" மாறன் உயிரிழந்ததாக சன்நியூஸ் செய்தியின் நியூஸ் கார்டும் சேர்ந்தே வைரல் செய்யப்பட்டு வருகிறது.



Archive link

ஏ1 திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்தவரும், நகைச்சுவை நடிகருமான தங்கதுரை " தவறான செய்தி மாறன் அண்ணன்கிட்ட இப்பதான் பேசினேன் நலமாக இருக்கிறார் " என தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.



Archive link 

சன் நியூஸ் சேனலின் முகநூல் பக்கத்தில் பார்க்கையில், " கொரோனாவால் நடிகர் மாறன் உயிரிழப்பு ! நடிகர் மாறன் கொரோனா பாதிப்பு காரணமாக செங்கல்பட்டு மருத்துவமனையில் உயிரிழப்பு ! கில்லி, தலைநகர் போன்ற படங்களில் நடித்துள்ளார் மாறன் " என நியூஸ் கார்டு வெளியாகி இருக்கிறது.



ஏ1 திரைப்படத்தில் நடித்த மாறன் இறந்ததாக பரவும் நியூஸ் கார்டு ஃபோட்டோஷாப் செய்யப்பட்டதா அல்லது சன் நியூஸ் முகநூல் பக்கத்தில் தவறான புகைப்படத்துடன் வெளியிடப்பட்டு பின்பு நீக்கப்பட்டு இருக்கலாம். எனினும், அது குறித்து தெளிவாய் தெரியவில்லை.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க