YouTurn

சீரியல் நடிகை சினேகா தான் நடிகர் நம்பியாரின் மகள் எனப் பரவும் வதந்திகள் !

சீரியல் நடிகை சினேகா தான் நடிகர் நம்பியாரின் மகள் எனப் பரவும் வதந்திகள் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி


விஜய் படம் முதல் சன் டிவி சீரியல் வரை நடித்த இவர் தான் பிரபல நடிகர் நம்பியாரின் மகள்! இவர் தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ஆதி படத்திலும், விஷாலின் வெடிப்படத்திலும் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அகல்யா, செல்லமே போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார்.




Facebook Link:

விரிவான விளக்கம்

பிரபல நடிகர் நம்பியாரின் மகள் தான் சீரியல் நடிகை சினேகா என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அப்பதிவுகளில், "இவர் தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ஆதி படத்திலும், விஷாலின் வெடிப் படத்திலும் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அகல்யா, செல்லமே போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார்" என்று குறிப்பிட்டும் சமூக ஊடகங்களில் பரவி வருவதைக் காண முடிகிறது.





உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது கடந்த 2022 லேயே Behind Talkies போன்ற சினிமா ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது. 



சீரியல் நடிகை சினேகா, உண்மையில் நடிகர் நம்பியாரின் மகள் தானா என்பது குறித்து தேடியதில், கடந்த 2023 நவம்பர் 10 அன்று Behindwoods TV யூடியூப் பக்கத்தில் நடிகை சினேகா இது குறித்து பேட்டி அளித்திருந்த நேர்காணலை காண முடிந்தது. அதில், "என்னுடைய அப்பா பெயர் நம்பியார். நம்பியார் என்பது ஒரு சமூகத்தின் (Community) பெயர். நம்பியார் என்பது கண்ணூர் பகுதியில் வாழும் ஒரு சிறிய சமூகம் ஆகும். நான் சென்னைக்கு வந்த போது, ஸ்நேகா என்ற பெயரில் பிரபலங்கள் இரண்டு மூன்று பேர் இருந்தார்கள். அதனால் அப்பாவின் பெயரை சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அதனால் ஸ்நேகா என்ற என் பெயருடன் நம்பியாரை சேர்த்துக்கொண்டேன்.

ஆனால் ஏற்கனவே நம்பியார் சார் இருந்ததால், பலரும் என்னை நடிகர் நம்பியாரின் மகள் என்றே கருதினர். அவருடைய மகளின் பெயரும் ஸ்நேகா நம்பியார் தான். ஆனால் அவர் என்னை விட வயதில் மூத்தவர். நான் எம்.என்.நம்பியாரின் மகள் இல்லை என்று பலரிடமும் தெளிவுபடுத்தியுள்ளேன். மீடியாவில் விளக்கம் அளிப்பது இது தான் முதன்முறை" என்று அதில் பேசியுள்ளதைக் காண முடிந்தது.



இதன் மூலம் நடிகர் எம்.என்.நம்பியாரின் மகள் பெயரும் சினேகா நம்பியார் என்பதால், சீரியல் நடிகை சினேகாவை, பலரும் நம்பியாரின் மகள் என்று தவறாக நினைத்துப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.

மேலும் படிக்க: நடிகை திவ்யா ஸ்பந்தனா உயிரிழந்ததாக ஊடகங்களில் வெளியான தவறான செய்தி!

மேலும் படிக்க: வைரலாகும் நடிகை ராஷ்மிகா, கத்ரீனா கைஃபின் போலி வீடியோக்கள்.. அச்சுறுத்தும் DeepFake தொழில்நுட்பம்!

முடிவு:

நம் தேடலில், சீரியல் நடிகை சினேகா நடிகர் எம்.என்.நம்பியாரின் மகள் என்று சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க