யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.2.5 கோடி வழங்கியுள்ளார் நடிகர் அஜித் குமார்.

Archive link

Archive link

விரிவான விளக்கம்
தமிழகத்தின் கொரோனா நிவாரண பணிகளுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதி பிரிவிற்கு நிதி வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, பொதுமக்கள், திரைபிரபலங்கள் என பலரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் அஜித் குமார் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.2.5 கோடி வழங்கி உள்ளதாக முன்னணி செய்தி ஊடகங்களில் பிரேக்கிங் நியூஸ் வெளியாகியது. ஆனால், அஜித் குமார் அளித்தது 25 லட்சமே, ஆனால் 2.5 கோடி என தவறான செய்தி வெளியாகி விட்டது.
Archive link
நடிகர் அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்த்ரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசின் செய்தி வெளியீட்டை பகிர்ந்து இருக்கிறார். அதில், " திரைப்பட நடிகர் திரு.அஜித் குமார் அவர்கள், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு RTGS மூலமாக 25 லட்சம் ரூபாய் வழங்கினார் " எனக் கூறப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் கடந்த ஆண்டில், கொரோனா நிவாரண பணிகளுக்காக பிஎம் கேர்-க்கு 1.25 கோடியும், தமிழகத்தின் முதல்வர் நிவாரண பிரிவுக்கு 50 லட்சமும், FEFSI-க்கு 25 லட்சமும் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் குமார் அளித்தது ரூ.25 லட்சம். ஆனால், முதலில் அரசு செய்திக் குறிப்பில் ரூ2.50 கோடி என தெரிவிக்கப்பட்டது. பின்னர் திருத்தப்பட்ட செய்திக் குறிப்பில் ரூ.25 லட்சம் என்ற சரியான தொகையை மாற்றி ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

Official announcement pic.twitter.com/XsQ6yMnx3k
— Suresh Chandra (@SureshChandraa) May 14, 2021