YouTurn

இந்தியன் ஒருவர் கண்டுப்பிடித்த ஏசி பைக்கா ?

இந்தியன் ஒருவர் கண்டுப்பிடித்த ஏசி பைக்கா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்திய இளைஞன் கண்டுபிடித்ததாக கூறி சமூகவளைதலங்களில் பரவிய இந்த படத்தில் உள்ள பைக் ஐரோப்பாவை சேர்ந்த carver technology என்ற நிறுவனத்தால் தயாரித்தது . இந்நிறுவனத்தின் நிறுவனரின் கனவான dynamic vehicle control என்ற தானியங்கியாக சமநிலைக்கு வரக்கூடிய இயந்திரநுட்பம் கொண்ட மூன்று மற்றும் நான்கு சக்கர...

பரவிய செய்தி

கேரளாவை சேர்ந்த ஓர் இளைஞன் ஏசி பைக்கை கண்டுப்பிடித்துள்ளார் . இதுவே வெளிநாட்டு மாணவனாக இருந்தால் அனைவரும் கண்டுக் கொண்டிருப்பர்.

விரிவான விளக்கம்

இந்திய இளைஞன் கண்டுபிடித்ததாக கூறி சமூகவளைதலங்களில் பரவிய இந்த படத்தில் உள்ள பைக் ஐரோப்பாவை சேர்ந்த carver technology என்ற நிறுவனத்தால் தயாரித்தது . இந்நிறுவனத்தின் நிறுவனரின் கனவான dynamic vehicle control என்ற தானியங்கியாக சமநிலைக்கு வரக்கூடிய இயந்திரநுட்பம் கொண்ட மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்தை உருவாக்குவது .

இந்த வாகனத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் மூன்று சக்கரங்களுடன் கார் மற்றும் பைக்யின்  கலவையாக உள்ளது . மேலும் சுயமாக தனக்கு ஏற்றது போல் சமநிலைக்கு மாற்றும் வகையில் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது .

2006 ஆம் ஆண்டு carver நிறுவனம் இந்த வாகனத்தை உருவாக்கினார்கள் . மேலும் 200 க்கும் அதிகமான இந்த ரக வாகனத்தை தயாரித்து விற்பனை செய்தார்கள் . மீண்டும் 2009ஆண்டு அதில் புதிய மாற்றங்களை கொண்டு வந்தார்கள் .

இப்படிப்பட்ட ஒரு தயாரிப்பை இந்தியன் கண்டுப்பிடித்தான் என்று பொருந்தாத செய்தியை பரப்பி வருகின்றனர் . வெளிநாட்டில் யாராவது ஒரு பைக் , கார் உடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டால் அதை பயன்படுத்தி தவறான வதந்திகளை பரப்புவதே சிலர்க்கு வேலையாக போய்விட்டது .

பொய்யான பெருமைகள் நமக்கு எதற்கு , உன்மையில் நம் இளைஞர்களின் கண்டுப்பிடிப்புகளுக்கு தக்க மரியாதை கிடைப்பதில்லை . முடிந்தால் தங்களை சுற்றி உள்ளவர்களின் திறமைகளை வெளிக்கொணர உதவுங்கள் .

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.