
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Twitter link | Archive link
விரிவான விளக்கம்
இன்றைய ஆவின் பால் கவர்
கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்வது சரி
தீபாவளியன்று இது மாதிரி பார்த்தீர்களா?
பொங்கலுக்கு வாழ்த்து சொல்லவும் pic.twitter.com/NyPJrJa5nX
— surianarayanan (@psurian) December 25, 2021
Never seen #chiefministermkstalin of Tamilnadu wishing for diwali.
But for #Christmas2021 wishes were print on govt owned Aavin milk packets.
This is what we call pseudo secularism.
This is true hatred politics pic.twitter.com/mwA879oN90
— karuppusamy - The Black God (@BlackGod638452) December 25, 2021
உண்மை என்ன ?
2021 கிறிஸ்துமஸ் தினத்திற்கு வாழ்த்துக் கூறி ஆவின் வெளியிட்ட பால் பாக்கெட்கள் செய்திகளிலும் கூட வெளியாகி இருக்கின்றன. ஆனால், கிறிஸ்துமஸ் தினத்திற்கு மட்டும் வாழ்த்துக் கூறி இருப்பதாக அல்லது திமுக ஆட்சியில் இப்படி நிகழ்வதாகப் பரவும் தகவலில் உண்மை இல்லை.
கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய ஆவின்https://t.co/WciCN2AH8n | #aavin | #Christmas | #ChristmasTree | #Christmas2021 | #News7TamilUpdates pic.twitter.com/mO6WqbN9e2
— News7 Tamil (@news7tamil) December 25, 2021
Twitter link
கடந்த ஆண்டிலும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு, ரம்ஜான், தீபாவளி , புத்தாண்டு மற்றும் பொங்கல் என ஒவ்வொரு பண்டிகையின் போதும் வாழ்த்து அச்சிடப்பட்ட ஆவின் பால் பாக்கெட்களை வெளியிட்டு இருக்கிறது.

கடந்த நவம்பர் 4-ம் தேதி தீபாவளி தினத்தன்று கூட " தீபங்களின் ஒளி இல்லத்தில் பரவட்டும் " என பச்சை, நீலம், ஆரஞ்சு என அனைத்து நிற பாக்கெட் கவர்களிலும் வாழ்த்து அச்சிடப்பட்டு இருந்துள்ளது.

முடிவு :
நம் தேடலில், ஆவின் பால் பாக்கெட்களில் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் மட்டுமே கூறப்பட்டு உள்ளதாகவும், தீபாவளி போன்ற இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூறி வெளியிடுவதில்லை எனப் பரவும் தகவல் தவறானது. அனைத்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து கூறி பால் பாக்கெட்களை ஆவின் வெளியிட்டு இருக்கிறது என அறிய முடிகிறது.
கூடுதல் தகவல் :
2022 செப்டம்பர் 2ம தேதி அர்ஜுன் சம்பத் ட்விட்டர் பக்கத்தில், "ஏன் இந்துக்கள் பண்டிகை ஆவின் நிர்வாகத்திற்கு தெரியாதா? அல்லது ஆவின் நிர்வாகத்தை இந்து மத வெறுப்பு திமுக அரசு தடுக்கிறதா? நம் இந்து சமுதாய மக்கள் இதன் சூழ்ச்சியை நன்கு புரிந்துகொள்ள வேண்டும், இந்து மத விரோதிகளுக்கு பாடம் கற்பிக்கும் நாள் கண்டிப்பாக வரும்" எனப் பதிவிட்டு இருக்கிறார்.
ஏன் இந்துக்கள் பண்டிகை ஆவின் நிர்வாகத்திற்கு தெரியாதா? அல்லது ஆவின் நிர்வாகத்தை இந்து மத வெறுப்பு திமுக அரசு தடுக்கிறதா?
நம் இந்து சமுதாய மக்கள் இதன் சூழ்ச்சியை நன்கு புரிந்துகொள்ள வேண்டும், இந்து மத விரோதிகளுக்கு பாடம் கற்பிக்கும் நாள் கண்டிப்பாக வரும்! pic.twitter.com/MEDMtF91i5
— Arjun Sampath (@imkarjunsampath) September 2, 2022
Archive link
பேசு தமிழா பேசு வீடியோவில் ராஜவேல், கிறிஸ்மஸ், ரம்ஜான் போன்று இந்து பண்டிகைகளுக்கும் ஆவின் தரப்பில் வாழ்த்து தெரிவித்து தெரிவிக்க வேண்டும் எனப் பேசி இருக்கிறார்.
Archive link
ஆனால், கிறிஸ்மஸ், ரம்ஜானுக்கு மட்டும் ஆவின் தரப்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டு பால் பாக்கெட்கள் வெளியிடுவதில்லை, தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது. ஆனால், மீண்டும் மீண்டும் பழைய வதந்தியை தொடர்ந்து விதைத்து வருகின்றனர்.