YouTurn

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 210 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட சிலை எனப் பரவும் தவறான வீடியோ!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 210 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட சிலை எனப் பரவும் தவறான வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சிஅம்மன் கோயிலில் 210 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட மீனாட்சி அம்மனின் விக்கிரகம் என்று கூறி புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.

பரவிய செய்தி

தமிழகத்தில் உலகப் புகழ்பெற்ற மதுரை கோயிலில் 210 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட ஸ்ரீ மீனாட்சி அம்மாவின் விக்கிரகம்.

X Link | Archive Link

விரிவான விளக்கம்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 210 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட மீனாட்சி அம்மனின் விக்கிரகம் என்று கூறி புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றது. 



உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்ததில். பரவி வரும் வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது. 

Getty images’ இணையதளப்பக்கத்தில் பரவி வரும் இதே புகைப்படம், மதுரையில் உள்ள நகைக்கடை ஒன்றில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருந்ததையும் காணமுடிகிறது.

எனவே இதுகுறித்து தேடியதில், மதுரையில் உள்ள செம்மனூர் நகைக்கடையின் ஃபேஸ்புக் பக்கத்தில், “உங்களுக்கு மதுரை மீனாட்சி அம்மனின் அருள் கிடைக்கட்டும். மதுரை மீனாட்சி அம்மனின் சிலை, 210 கிலோ தங்கம் மற்றும் வெள்ளியைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆசிர்வதிக்கப்பட்ட இச்சிலை எங்கள் ஷோரூமில் வைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டு கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 12 அன்று வீடியோ ஒன்று பதிவு செய்யபட்டிருந்தது.

இதே போன்று, செம்மனூர் நகைக்கடையின் ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்த புகைப்படங்கள் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 13 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது. 

எனவே மதுரையில் உள்ள செம்மனூர் நகைக்கடையின் நுழைவு வாயிலில், 210 கிலோ தங்கம் மற்றும் வெள்ளியைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட மீனாட்சி அம்மன் சிலையை, மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள சிலை என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறியமுடிகிறது.

முடிவு:

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 210 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட மீனாட்சி அம்மனின் விக்கிரகம் என்று கூறி பரவி வரும் வீடியோ தவறானது என்பதை அறியமுடிகிறது. இது மதுரையில் உள்ள செம்மனூர் நகைக்கடையின் நுழைவு வாயிலில், 210 கிலோ தங்கம் மற்றும் வெள்ளியைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட மீனாட்சி அம்மன் சிலை. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க