YouTurn

வங்கதேசத்தில் இந்து பெண்களின் நிலை எனப் பரவும் உபி ஹத்ராஸ் சத்சங்க கூட்ட நெரிசல் வீடியோ!

வங்கதேசத்தில் இந்து பெண்களின் நிலை எனப் பரவும் உபி ஹத்ராஸ் சத்சங்க கூட்ட நெரிசல் வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

வங்கதேசத்தில் உள்ள இந்து பெண்களின் நிலையைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது

பரவிய செய்தி

பங்களாதேஷ் இந்து பெண்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

X Link | Archive Link

விரிவான விளக்கம்

வங்கதேசத்தில் சிறுபான்மையினர்கள் தாக்கப்படுவதாகக்கூறி பல வீடியோக்கள் வலதுசாரிகளால் தவறாகப் பரப்பப்பட்ட நிலையில், தற்போது வங்கதேசத்தில் உள்ள இந்து பெண்களின் நிலையைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. 

பரவி வரும் வீடியோவில், பல பெண்கள் மருத்துவமனைக்கு வெளியேயும், உள்ளேயும் வரிசையாக இறந்து கிடப்பதைத் தெளிவாகக் காணமுடிகிறது.

X Link

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை ‘Google Reverse Image Search’ மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், பரவி வரும் வீடியோவில் இருப்பதைப் போன்ற அதே காட்சிகளைக் கொண்ட வீடியோவைக் குறிப்பிட்டு ‘Spark Media‘ ஊடகத்தின் எக்ஸ் பக்கத்தில், உத்தரப் பிரதேசம் - ஹத்ராஸ் மாவட்டத்தில் மத வழிபாட்டு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 120 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம் என்று குறிப்பிட்டு வீடியோ பதிவிடப்பட்டிருந்தது

மேலும் இதே போன்று, ‘India Today’ ஊடகப் பக்கத்தில் பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகளைக் குறிப்பிட்டு கடந்த மாதம் 05 ஆம் தேதி (ஜூலை 05) செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அச்செய்தியில், உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஜூலை 02 அன்று நடைபெற்ற 'போலே பாபா' சத்சங்க நிகழ்ச்சியில் (ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில்) 2,50,000 க்கும் அதிகமான மக்கள் ஒரே இடத்தில் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் என கிட்டத்தட்ட 123 பேர் உயிரிழந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.



இதே போன்று, ‘Swadesh News’ ஊடகப் பக்கத்திலும் பரவி வரும் வீடியோவில் உள்ள காட்சிகளைக் குறிப்பிட்டு ஜூலை 02 அன்று “ஹத்ராஸ் சத்சங் நெரிசல்: 27 பேர் உயிரிழந்தனர்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தனர். 

இதன்மூலம் பரவி வரும் வீடியோ, உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஜூலை 02 அன்று நடைபெற்ற 'போலே பாபா' சத்சங்க நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக மக்கள் உயிரிழந்தபோது எடுக்கப்பட்டது என்பதை அறியமுடிகிறது. உபியில் எடுக்கப்பட்ட வீடியோவை, வங்கதேசத்தில் இந்துப் பெண்களின் நிலை என்று கூறி வலதுசாரிகள் பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

முடிவு:

நம் தேடலில், வங்கதேசத்தில் உள்ள இந்து பெண்களின் நிலையைப் பாருங்கள் என்று கூறி பரவும் வீடியோ, உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடைபெற்ற 'போலே பாபா' சத்சங்க நிகழ்ச்சியோடு தொடர்புடையது என்பதை அறியமுடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க