யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்தியாவில் ரயில் தண்டவாளத்தின் பாகங்களை திருடும் முஸ்லிம் குழந்தைகள் எனக் கூறி 40 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
இந்தியாவில் ரயில் தண்டவாளத்தின் பாகங்களை திருடும் ஜிகாதிகள் எனக் கூறி 40 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் பதிவுகளில், ரயில் தண்டவாளத்தின் அருகில் உள்ள அனைத்து முஸ்லிம் குடிசைவாசிகளையும் அகற்றுங்கள், இல்லையெனில் இந்த ஜிஹாதிகள் ஒரு நாள் பெரிய குற்றங்களை செய்வார்கள் என்று குறிப்பிட்டு, ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவைக் குறிப்பிட்டு சமூக ஊடகப் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.
वीडियो पता नही कहा की है पर आप कपड़ो से पहचान सकते हो सूर के पिल्लों को @RailMinIndia @AshwiniVaishnaw
— 𝐗 𝐒𝐞𝐜𝐮𝐥𝐚𝐫 (@XSecular_) August 29, 2024
महोदय जितने भी रेलवे पटरी के आस पास मुस्लिम झुग्गी झोपड़ी में पड़े है उन्हें हटाओ नही तो किसी दिन ये जिहादी बहुत बड़ा कांड कर देंगे pic.twitter.com/nvoZGrf0UPசிறுசா இருந்தாலும் பெருசா இருந்தாலும் பாம்பு விஷ ஜந்துதான்... பாரபட்சம் பாக்காம அடிச்சு பல்லை புடுங்கி விட்ரனும்.... 🤬 pic.twitter.com/9qEzzgKvcV
— அகத்தியர் (@aghathiyar) August 29, 2024
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை “Google Reverse Image Search” மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
“The Karachi Exposer” ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில், பரவி வரும் இதே வீடியோ பாகிஸ்தானின் கராச்சியில் அமைந்துள்ள ‘Boat Basin Chowk’ பகுதியில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு கடந்த 2023 டிசம்பர் 06 அன்று பதிவிடப்பட்டிருந்தது.
இதே போன்று, “Momentique News” ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்திலும், பரவி வரும் இதே வீடியோ “சர் தாஜ் கான், பஹட்க் போட் பேசின் செளக் (Sir Taj Khan, Pahatk Boat Basin Chowk) அருகே, ரயில் தண்டவாளத்தின் பொருட்கள் நிறைய திருடப்படுகின்றன. PS போட் பேசின் (PS Boat Basin) இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளது” என்று குறிப்பிட்டு கடந்த 2023 டிசம்பர் 06 அன்று பதிவிடப்பட்டிருந்தது.
மேலும் இது குறித்து பாகிஸ்தான் காவல்துறையினர், “Media Cell - DIG South Zone” என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குழந்தைகளை பெசன் காவல் நிலைய பொறுப்பாளர் எச்சரித்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்ப்டைத்தார் என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர்.
இதன் மூலம் பரவி வரும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, பாகிஸ்தானில் அமைந்துள்ள கராச்சியில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், இந்தியாவில் ரயில் தண்டவாளத்தின் பாகங்களை திருடும் முஸ்லிம் குழந்தைகள் எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
