யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஆந்திர பிரதேசம், கூடூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருக்கும் சாமி தாஸ் என்பவரை மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த கலிந்தா என்பவர் தாக்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
என்னடா தமிழ்நாட்டுல காவலர்களுக்கே இதான் நிலைமையாடா... அப்போ சாதாரண மக்களின் நிலை....???
விரிவான விளக்கம்
"தமிழ்நாட்டில் காவலர்களுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன?" என்று கூறி 32 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை பாஜகவினர் உட்பட பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காணமுடிகிறது.
*சட்டம், ஒழுங்கை காப்பாத்துற போலீசுக்கே இந்த நிலைமையா*@mkstalin @tnpoliceoffl pic.twitter.com/4tyqE3HH0Z
— Vinoth Kumar.V ( மோடியின் குடும்பம் ) (@Vinoth2214) July 22, 2024
*சட்டம், ஒழுங்கை காப்பாத்துற போலீசுக்கே இந்த நிலைமையா...*😡 pic.twitter.com/Hm9xEi8KtB
— MK (@MaheenSylvan) July 22, 2024
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், "World of India" என்ற எக்ஸ் பக்கத்தில் பரவி வரும் இதே வீடியோ, "திருப்பதி மாவட்டம் கூடூர் சாதுபேட்டா மையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் ஒருவர், பின்னால் இருந்து தடியால் தாக்கப்பட்ட சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது" என்று குறிப்பிட்டு ஜூலை 19 அன்று பதிவிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது.
A head #Constable was attacked from behind with a stick, while on duty in Sadhupeta Centre of #Gudur in #Tirupati district, captured in #CCTv.#PoliceEncounter#CrimeNews#PoliceUniform#AssaultCase#GudurPolice pic.twitter.com/GzYOsTGHhB
— Word Of India (@wordofindia) July 19, 2024
எனவே இதுகுறித்து மேலும் தேடியதில், "வீடியோ: குடிபோதையில் ஆந்திர போலீஸ்காரரை மரக்கிளையால் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார்" என்று குறிப்பிட்டு 'India Today' பக்கத்தில் ஜூலை 20ஆம் தேதி அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதில் "ஆந்திராவில் ஒருவர் மரக்கிளையால் காவலர்மீது தாக்குதல் நடத்தினார். குற்றம்சாட்டப்பட்டவர் குடிபோதையில் இருந்தபோது, திருப்பதி மாவட்டம் கூடூர் நகரில் காவலரைத் தாக்கியதாக போலீஸார் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலில் காயம் அடைந்தவர் சாமிதாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காவலர் தலையில் பலத்த காயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், இது ஆந்திர பிரதேசம், கூடூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருக்கும் சாமிதாஸ் என்பவரை மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த கலிந்தா என்பவர் தாக்கிய வீடியோ என்பதையும், காவலரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதையும் மற்ற ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் உறுதி செய்யமுடிகிறது.
முடிவு:
நம் தேடலில், தமிழ்நாட்டில் காவலர் ஒருவர் தாக்கப்படும் காட்சி எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது.
