YouTurn

வங்கதேச கலவரத்தில் சிறுபான்மையினர்களின் கோயில்கள் தாக்கப்படுவதாகப் பரவும் பழைய வீடியோ!

வங்கதேச கலவரத்தில் சிறுபான்மையினர்களின் கோயில்கள் தாக்கப்படுவதாகப் பரவும் பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

சிறுபான்மையினர்களின் வழிபாட்டு தளங்கள் தாக்கப்படுவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பரவிய செய்தி

பங்களாதேஷில் மைனாரிட்டி வழிபாட்டு தளங்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது..

X Link | Archive Link

விரிவான விளக்கம்

வங்கதேசத்தில் மாணவ அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய போராட்டங்கள், மிகப்பெரிய வன்முறைகளாக அங்கு வெடித்தன. இதனையடுத்து வங்கதேசத்தின் புதிய இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளார். 

இந்நிலையில் அங்கு சிறுபான்மையினர்களின் வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை வலதுசாரிகள் பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் பரப்பி வருவதையும் காணமுடிகிறது. 

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், இது கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறியமுடிந்தது. 

மேலும் ‘Asad Noor’ என்ற யூடியூப் பக்கத்தில், பரவி வரும் இதே வீடியோ கடந்த 2023 ஜூன் 23 அன்றே “முல்லா-முன்ஷியும் அரசும் ஒன்று சேர்ந்தது! என்று குறிப்பிட்டு வீடியோவாக வெளியிடப்பட்டிருந்தது. மேலும் வீடியோவில், சித்திக் என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபர்தான் சிலைகளை சேதப்படுத்தினார் என்று கூறப்படுகிறது. பின்பு அங்கு வந்த உள்ளூர் மக்கள் அவரைப்பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர் என்றும் அதில் கூறப்படுவதைக் காணமுடிகிறது.

எனவே, இது தற்போது நடைபெற்ற வங்கதேச கலவரத்தோடு தொடர்புடைய வீடியோ அல்ல என்பதை உறுதி செய்யமுடிகிறது. பரவி வரும் வீடியோ கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது. இதன் உண்மைத்தன்மையை அறியாமல் வலதுசாரிகள் பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

முடிவு:

நம் தேடலில், வங்கதேச கலவரத்தில் சிறுபான்மையினர்களின் கோயில்கள் தாக்கப்படுவதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதையும், பரவி வரும் வீடியோ கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது என்பதையும் அறியமுடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க