YouTurn

இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீது மத ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீது மத ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த சம்பவம் வங்கதேசத்தின் தலைநகரான டாக்கா அருகில் உள்ள மிர்பூர் என்ற பகுதியில் நடந்ததாகும்.

பரவிய செய்தி

பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தினம் தினம் உயருக்காக போராடும் இஸ்லாமியர்கள்...


image.png


X Link

விரிவான விளக்கம்

முஸ்லீம்கள் பொதுவாக அணியும் தகியா தொப்பி அணிந்திருக்கும் ஆண்களை அவர்களது குடியிருப்பு பகுதியில் நுழைத்து சில நபர்கள் கட்டையால் தாக்குகிறார்கள். சில நொடிகளுக்குப் பின்னர், அந்த குடியிருப்புவாசிகள் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்திய நபர்களைப் பிடிக்கிறார்கள். இந்த சம்பவத்தை காட்சிப்படுத்தும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான வீடியோவை பதிவிட்டு, இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்ததாக சமூக வலைத்தளத்தில் திமுக ஆதரவாளரால் பரப்பப்படுகிறது.

https://x.com/i/web/status/1896208093404598312

உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘Mohona Tv Ltd’ என்ற யூட்யூப் தளத்தில் இந்த வீடியோவைக் காண முடிந்தது. வங்கதேசத்தில் பேசப்படும் ’வங்களா’ மொழியில் தலைப்பிடப்பட்டிருந்த இந்த வீடியோ கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இதில் #mohammadpur  #dhakacrime என்ற Hashtag-களை காணமுடிந்தது. 


image.png


மேலும் தேடியதில், இதே வீடியோ ‘Mohona Tv’ என்ற பேஸ்புக் தளத்தில் பிப்ரவரி 25ஆம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. அதில் ‘மிர்பூரில் நடந்த கொள்ளையின் சிசிடிவி காட்சிகள்’ என்று வங்களா மொழியில் தலைப்பிடப்பட்டிருந்தது. இதிலும், #Mirpur #dhakacrime என்ற Hashtag-களை காணமுடிந்தது. 



Hashtag-களில் உள்ள Mohammadpur, Mirpur ஆகியவை பற்றித் தேடியதில், மிர்பூர் என்பது வங்கதேசத்தின் தலைநகரமான டாக்காவிற்கு வடக்கு திசையில் புறநகர்ப் பகுதி என்பது தெரிய வருகிறது. மேலும், முகமதுபூர் என்பதும் டாக்கா நகரத்தின் ஒரு பகுதி என்பதும் தெரிய வருகிறது. 


மேலும் இந்த ‘Mohona Tv’ வங்கதேசத்தில் இருந்து ஒளிபரப்பப்படும் ஒரு செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல் என்ற அதன் யூட்யூப் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேற்குறிப்பிட்ட தகவல்களிலிருந்து இது வங்கதேசத்தில் நடந்த கொள்ளை சம்பவம் ஒன்றின் சிசிடிவி காட்சி என்பது உறுதியாகிறது. இதற்கு எவ்விதமான மதப் பின்புலமும் இல்லை.


முடிவு:


வங்கதேசத்தில் நடந்த கொள்ளைச் சம்பவத்தின் சிசிடிவி காட்சியை, இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீது மத ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தவறாகப் பரப்புகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க