YouTurn

முஸ்லிம் சிறுவன் பூமாலையில் எச்சில் துப்புவதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

முஸ்லிம் சிறுவன் பூமாலையில் எச்சில் துப்புவதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த வீடியோ பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது. இதனை மத வெறுப்புக் கண்ணோட்டத்துடன் பாஜக ஆதரவாளர்கள் பரப்புகிறார்கள்.

பரவிய செய்தி

முஸ்லிம் சிறுவன்  அவர் கோவில் முன் பூ விற்கிறார் இந்த பூக்களை கடவுளுக்கு சமர்பிக்கிறோம், இவர்கள் குழந்தைகள், ஏழைகள், இந்த ஏழைகள் இந்த வயதிலும் உழைக்க வேண்டும் அவர்களிடமிருந்து வாங்க வேண்டும் என்று பரிதாபப்பட்டு அவர்களிடமிருந்து பூக்களை வாங்குகிறோம். இவன் என்ன செய்கிறான் பாருங்கள்…



X Link

விரிவான விளக்கம்

சாலையோரத்தில் வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தில் ஒரு சிறுவன் அமர்ந்து, தன்னிடமிருக்கும் பூமாலைகளில் தண்ணீரை உமிழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சிறிய வீடியோவை பதிவிட்டு, இந்த சிறுவன் ஒரு முஸ்லிம் என்றும், கோவிலில் கடவுளுக்கு சமர்ப்பிக்கும் பூமாலையில் அவன் தண்ணீரை உமிழ்கிறான் என்றும் சமூக வலைதளமான ’எக்ஸ்’ல் தகவல் பரப்பப்படுகிறது. இந்த டிவீட் பின்னர் delete செய்யப்பட்டுவிட்டது.




உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘Jaunpuriya Hub’ என்னும் பேஸ்புக் பக்கத்தில், இந்த வீடியோவை பதிவிட்டு ”பெண்கள் மாலைகள் வாங்கும் போது ஆதார் அட்டையைப் பார்த்த பின்புதான் வாங்கவேண்டும். இல்லையென்றால், அவர்கள் கழுவப்பட்ட மாலைகளைத்தான் அணிய நேரிடம்” என்று நகைச்சுவையாக எழுதப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது.



இந்த வீடியோவின், பின்னணியில் நிற்கும் கார் ஒன்றின் வாகன பதிவெண்ணைக் காண்கிறோம். அதில் ‘AQV 503’ என்று எழுதப்பட்டிருக்கிறது. இந்திய மாநிலங்கள் அனைத்தின் வாகன பதிவெண்களும் “ TN, AP, GJ” என்று இரண்டு எழுத்துக்களில் தான் தொடங்கும். மேலும், இந்திய வாகனப் பதிவெண்ணிற்கான மாதிரியுடன் இது ஒத்துப்போகவில்லை.



இதனால், வேறு நாடுகளின் வாகனப் பதிவெண் மாதிரிகளைத் தேடினோம். குறிப்பாக தெற்காசிய நாடுகளின் பதிவெண் மாதிரிகளைத் தேடியதில், பாகிஸ்தான் நாட்டின் ’சிந்து (Sindh)’ மாகாணத்தின் வாகனப் பதிவெண் மாதிரியுடன் ஒத்துப்போவதைக் காண்கிறோம். மூன்று ஆங்கில எழுத்துக்கள், அதைத் தொடர்ந்து மூன்று இலக்க எண்கள், மஞ்சள் பின்புலத்தில் கருப்பு எழுத்துகள் என வீடியோவில் இருக்கும் பதிவெண் மாதிரியுடன் இது ஒத்துப்போகிறது. 


இதிலிருந்து, இந்த வீடியோ பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது என்பது நிரூபணமாகிறது. ஆனால், பாஜக ஆதரவாளர்கள் இந்த வீடியோவை மதக் கண்ணோட்டத்தில் திரித்துப் பரப்புகின்றனர்


ஏற்கனவே, ’முஸ்லிம் மக்கள் நடத்தும் உணவுக்கடைகளில் சாப்பாட்டில் எச்சில் துப்பிக்கொடுக்கிறார்கள்’ என்று  இந்துத்துவ ஆதரவாளர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அவர்கள் ’எச்சில் ஜிகாத்’ என்று பெயரும் வைத்துள்ளனர். ’எல்லாவற்றிலும் எச்சில் துப்பும் முஸ்லிம்கள் அசுத்தமானவர்கள். அதனால், அவர்களையும் அவர்களது பொருட்களையும் புறக்கணியுங்கள்’ என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 



இதனால்தான், யாரோ ஒரு சிறுவன் எச்சில் துப்பும் வீடியோவை பதிவிட்டு அதனை இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்திற்கு ஏதுவாக இந்துத்துவ ஆதரவாளர்கள் பரப்புகிறார்கள்.


முடிவு: 


இந்த வீடியோ பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது. பாஜக ஆதரவாளர்கள் இதனை முஸ்லிம்களுடன் இணைத்து மத வெறுப்பு கண்ணோட்டத்துடன் திரித்துப் பரப்புகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க