யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இடிக்கப்பட்டது ஹஸ்ரத் பாபா அலி பக்லா-வின் “சூபி” ஆலயமாகும்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
சிறு தூண்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ள ஒரு கட்டிடத்தை இஸ்லாமிய அடையாளத்துடன் இருப்பவர்கள் சூழ்ந்துகொண்டு இடிக்கிறார்கள். அந்தக் கட்டிடத்தை சுற்றி முட்டி அளவு உயரத்தில் கட்டப்பட்டுள்ள சிறிய சுவற்றையும், கட்டிடத்தின் மேற்கூரையையும் இடிக்கிறார்கள். இதனைக் காட்சிபடுத்தும் 2 நிமிடம் நீண்ட வீடியோவை பதிவிட்டு, ’பங்களாதேஷில் இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக’ ‘எக்ஸ்’ தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், பேஸ்புக் தளத்தில், இதனையொத்த வீடியோ ஒன்றைக் காணமுடிந்தது. அந்த வீடியோவின் Description-ல் ‘அல்லாஹ்வின் அலி ஹஸ்ரத் பாபா அலி பக்லா (RA) புனித ஆலயம் - நாசவேலை. இடம்: வார்டு எண். 9, தக்ஷின் குமரியா பாரி மன்சூர் நகர், காசிபூர், சிராஜ்கஞ்ச்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கட்டிடம் இடிக்கப்படும் சம்பவத்தை இந்த வீடியோ வேறொரு கோணத்தில் காட்சிபடுத்துவதாக இருக்கிறது. இந்த வீடியோவில் இருக்கும் கட்டிடத்தின் அமைப்பு, தூண்கள், அதன் வர்ணம் ஆகியவை பரப்பபடும் வீடியோவில் இருப்பதுடன் ஒத்துப்போகிறது.

இதிலிருந்து, இந்த சம்பவம் பங்களாதேஷில் உள்ள காசிபூர் என்ற பகுதியில் உள்ள ஹஸ்ரத் பாபா அலி பக்லா-வின் புனித ஆலயம் நாசப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தெரிய வருகிறது.
பங்களாதேஷ் நாட்டில் மத அடிப்படைவாதம் அதிகரித்து வருவதாக செய்திக் கட்டுரையை ’The Sri Lanka Guardian’ செய்தித்தளம் வெளியிட்டிருக்கிறது. அதில், கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி வன்முறைக் கும்பலால் ஹஸ்ரத் பாபா அலி பக்லா-வின் “சூபி” ஆலயம் இடிக்கப்பட்டது பற்றி குறிப்பிடப்படுகிறது.

மேற்கூறிய தகவல்களில் இருந்து, பரப்பப்படும் வீடியோவில் இடிக்கப்படுவது சூபி ஆலயம் தான். இந்துக் கோவில் அல்ல என்பது தெளிவாகிறது.
முடிவு:
இந்த வீடியோவில் இடிக்கப்பட்டது இந்துக் கோவில் அல்ல. ஹஸ்ரத் பாபா அலி பக்லா-வின் ’சூபி’ ஆலயமாகும்.
