யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது 2022 நவம்பர் மாதம் சைப்ரஸ் (Cyprus) நாட்டில் உள்ள அய்யா நாபா (Ayia Napa) கடற்கரையில் ஏற்பட்ட ‘Tornadic Waterspout’ ஆகும்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கடற்கரையோரம் கடல்நீரில் சூறாவளி சுழன்றட்டிப்பதை சில நொடிகள் காட்சிபடுத்தும் வீடியோவை பதிவிட்டு, இது குலசேகரன்பட்டினம் கடற்கரையில் ஏற்பட்டதாக சமூக வலைதளமான இஸ்டாகிராமில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘The Weather Channel’ என்ற வலைதளத்தில் இதன் முழு வீடியோவைக் காணமுடிந்தது. ‘The Weather Channel’ 2022 நவம்பர் 8ஆம் தேதி வெளியிடபட்டுள்ளது செய்தியின்படி, 2022 அக்டோபர் 17ஆம் தேதியன்று, சைப்ரஸ் (Cyprus) நாட்டில் உள்ள அய்யா நாபா (Ayia Napa) கடற்கரையில் ‘Tornadic Waterspout’ ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இது.

Waterspouts என்பது சுறாவளி போன்றதாகும். நிலத்தில் ஏற்படும் சூறாவளி (Tornado) என்பது குழல்(Funnel) போல் காட்சியளிக்கும் வலுவான காற்றுச் சுழற்சியாகும். வழக்கமாக காற்று நம் கண்களுக்கு தெரியாது. ஆனால், இந்த காற்றுச் சுழற்சியில் நீர் துளிகள், தூசிகள், பிற சிறிய கசடுகளும் இருப்பதால்தான் சூறாவளி நமது கண்களுக்கு தெரிகிறது. இது வழக்கமாக ’நிலத்திலிருந்து மேகக்கூட்டம் வரை’ நீண்டதாக இருக்கும்.
இதேபோல், Waterspouts என்பது நீரில் ஏற்படும் சூறாவளியாகும். இதில் Fair Weather waterspouts மற்றும் Tornadic waterspouts என இரண்டும் வகைகள் உண்டு. இதில் நாம் வீடியோவில் பார்ப்பது, Tornadic waterspout ஆகும். இது நீரிலே உருவாகக்கூடிய காற்றுச் சுழற்சியாக இருக்கலாம் அல்லது நிலத்தில் உருவான காற்றுச் சுழற்சி நீரை நோக்கி நகர்ந்ததாக இருக்கலாம். இந்த Tornadic waterspout பெரும்பாலும் அது ஏற்படும் பகுதிக்கு இடியுடன் கூடிய மழையை கொண்டுவருவதாகவே இருக்கும்.
அய்யா நாபா கடற்கரையில் ஏற்பட்ட ‘Tornadic Waterspout’ பெரிதாக சேதத்தை விளைவிக்கவில்லை என்றும் இதனால் யாரும் காயமடையவில்லை என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.
மேற்கூறிய விவரங்களில் இருந்து வீடியோவில் காணப்படுவது புயல் (Cyclone) அல்ல. அது சைப்ரஸ் (Cyprus) நாட்டில் உள்ள அய்யா நாபா கடற்கரையில் ஏற்பட்ட ‘Tornadic Waterspout’ என்ற நீர்வழிச் சூறாவளியாகும். இதனை தூத்துகுடி மாவட்டத்தில் உள்ள குலசை (என்னும்) குலசேகன்பட்டினத்தின் கடற்கரையில் ஏற்பட்ட புயல் என்று தவறாக பரப்புகின்றனர். மேலும், 13/12/3024 என்று அன்றைய தேதியும் தவறாக எழுதப்பட்டுள்ளது.
முடிவு:
2022 அக்டோபர் மாதம், சைப்ரஸ் (Cyprus) நாட்டில் உள்ள அய்யா நாபா (Ayia Napa) கடற்கரையில் ‘Tornadic Waterspout’ ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இது. இதனை குலசை கடற்கரையில் ஏற்பட்ட புயல் என்று தவறாக பரப்புகின்றனர்.
