YouTurn

இஸ்ரேலின் போர் விமானங்களை ஈரான் தாக்கி அழித்ததாக தவறாகப் பரப்பப்படும் வீடியோ!

இஸ்ரேலின் போர் விமானங்களை ஈரான் தாக்கி அழித்ததாக தவறாகப் பரப்பப்படும் வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த பிப்ரவரி மாதம் பாலஸ்தீன அகதி முகாமான ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பிறகு எடுக்கப்பட்ட காணொளி இது.

பரவிய செய்தி

இஸ்ரேலின் 30F ரக 35 போர் விமானங்களை ஈரான் யேவுகணை தாக்குதலால் வெற்றிகரமாக அழித்துள்ளது. இந்த ஜெட் விமானங்கள் 40,000 குழந்தைகளை இனப்படுகொலை செய்ய பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. It's a pay back time.



X Link

விரிவான விளக்கம்

இஸ்ரேலுக்கும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையில் நடந்து வரும் சச்சரவில், ஹிஸ்புல்லாவிற்கு ஆதரவாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியிருக்கிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில் சிதிலமடைந்த ஒரு பகுதியை காட்சிபடுத்தும் காணொளி ஒன்றை பதிவிட்டு, இஸ்ரேலின் 30F ரக போர் விமானங்களை ஈரான் ஏவுகணை கொண்டு அழித்ததாக தகவல் பரப்பப்படுகிறது.


https://x.com/i/web/status/1841339818250244566



உண்மை என்ன?


பரப்பப்படும் காணொளியின் key frame-களைக் கொண்டு தேடுகையில், ’The National’ என்னும் ஆங்கில செய்தித்தளத்தில் வெளியான புகைப்பட தொகுப்பின் மூலமாக, இது கடந்த பிப்ரவரி மாதம்  ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது  எடுக்கப்பட்ட காணொளி என்பதை கண்டுகொள்ள முடிந்தது. அதே புகைப்படத்தை கொண்டு ‘a news’ என்னும் செய்தித்தளம் ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. 



மேலும் தேடுகையில், இதே காணொளி கடந்த ஜுலை மாதத்தில் எக்ஸ் தளத்தில், ‘ரஃபா அகதி முகாமில் உள்ள 6 லட்சம் குழந்தைகளுக்கான தங்குமிடத்தில் குண்டு போடுவது தான் தற்காப்பா?’ என்று பதிவிடப்பட்டிருப்பதை காண்கிறோம். 



இதிலிருந்து இந்த காணொளியில் நாம் பார்ப்பது, இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ரஃபா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கான அகதி முகாம் என்று தெரிகிறது.


முடிவு:


இந்த காணொளி, இஸ்ரேலின் போர் விமானங்களை ஈரான் ஏவுகணை கொண்டு தாக்கியதாக தவறாக பரப்பப்படுகிறது. இது கடந்த பிப்ரவரி மாதம் ரஃபா பகுதியை இஸ்ரேல் தாக்கிய போது எடுக்கப்பட்டது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க