யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
இஸ்ரேல் நாட்டில் டெல் அவிவ் நகரில் பிள்ளையார் கோவில் இருப்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
இஸ்ரேலில் உள்ள பிள்ளையார் கோவில் எனப் பரவும் படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் இணையத்தில் தேடினோம். அதே இடத்தில் எடுக்கப்பட்ட வேறொரு புகைப்படம் ‘Easy’ என்னும் தளத்தில் இருப்பதைக் காண முடிந்தது.

அதில், ‘Muunar, South Indian Dhaba Vegetarian Indian Restaurant’ என்றும் இது இஸ்ரேலில் Tel Aviv பகுதியில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பக்கத்தில் உணவகத்தின் பேஸ்புக் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
அந்த பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த சில புகைப்படங்களிலும் பரவக் கூடிய படத்தில் உள்ள அதே பிள்ளையார் ஓவியத்தைக் காண முடிகிறது. கடையின் பெயர் மற்றும் அதன் முகவரியைக் கொண்டு தேடியதில் அது இஸ்ரேலில் இருப்பதை உறுதி செய்ய முடிந்தது.

மேற்கொண்டு தேடியதில் அந்த உணவகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2016, நவம்பர் மாதம் இந்த பிள்ளையார் ஓவியம் வரைந்தது தொடர்பான பதிவொன்றையும் காண முடிகிறது.
இந்த கடையின் உரிமையாளர் இந்தியாவைச் சேர்ந்தவரா அல்லது இஸ்ரேலைச் சேர்ந்தவரா என்பதை அறிய அவர்களது பக்கத்தில் இருந்த தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால், தொடர்பு கொள்ள முடியவில்லை. தகவல் கிடைக்கும் பட்சத்தில் அதனையும் இக்கட்டுரையில் கூடுதல் தகவலாக இணைப்போம்.
இத்தகவல்களிலிருந்து இஸ்ரேலில் உள்ள பிள்ளையார் கோவில் எனப் பரவும் தகவல் உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது. அது ஓர் உணவகத்தின் வெளியே எடுக்கப்பட்ட புகைப்படம்.
முடிவு:
இஸ்ரேலில் உள்ள பிள்ளையார் கோவில் எனப் பரவும் புகைப்படம் ஓர் உணவகத்தின் வெளியே வரையப்பட்ட ஓவியம். அது கோவில் கிடையாது.
இஸ்ரேல் டெல்அவிவ் நகரில் கணேசர் கோவில் pic.twitter.com/vuL9eVl0pD
— E Chidambaram. (@JaiRam92739628) June 19, 2024